மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் மே 25ம் தேதிக்குள் வருடாந்திர அடையாள உறுதி நடவடிக்கை அல்லது வாழ்க்கை சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மாதந்தோறும் இயல்பாக ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2022ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி வரை கிடைக்கப் பெற்ற தரவுகளை வெரிஃபிகேஷன் செய்ததன் அடிப்படையில், ஓய்வூதிய நிர்வாகக் குடையின் கீழ் வந்துள்ள ஓய்வூதியதாரர்களில் 43,774 பேர் தங்களது வருடாந்திர சான்றளிப்பு நடவடிக்கையை உறுதி செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் ஆன்லைன் மூலமாக அல்லது ஓய்வூதியம் பெறும் தொடருடைய வங்கியின் மூலமாக 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னதாக அடையாள சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவு செய்திருக்க வேண்டியவர்கள். ஆனால், இன்னும் அதைச் செய்யாமல் உள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. pre approved loan : இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்!
இது மட்டுமல்லாமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள் எந்த வகையிலும் தங்கள் வருடாந்திர அடையாளச் சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவு செய்யாமல் உள்ளனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வருடாந்திர அடையாள சான்றளிப்பு நடவடிக்கையை மேற்கொள்வது எப்படி?
* டிஜிட்டல் ஜீவன் பிரமான் ஆன்லைன் அல்லது பிரமான் ஃபேஸ் ஆப் மூலமாக முக அடையாளங்களை உறுதி செய்யலாம்.
* இந்த ஆப் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விவரங்கள் இங்கே உள்ளன. https://jeevanpramaan.gov.in/package/documentdowload/JeevanPramaan_FaceApp_3.6_Installation
* SPARSH ஓய்வூதியதாரர் - உங்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் அமைப்பாக, “பாதுகாப்புத் துறை - பிசிடிஏ அலாஹாபாத்’’ என்பதை தேர்வு செய்யவும்.
* Legacy ஓய்வூதியதாரர் - உங்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் அமைப்பாக “பாதுகாப்பு - Jt. CDA (AF) Subroto Park’’ அல்லது “பாதுகாப்பு - PCDA (P) அலஹாபாத் அல்லது “பாதுகாப்பு - PCDA (கடற்படை) மும்பை என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சிஎஸ்சி சேவை மையங்களை அணுகி வருடாந்திர சரிபார்ப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்யலாம்.
ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள DPDO அலுவலகத்தை அணுகியும் வாழ்க்கை சான்றை வழங்கலாம். ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் வங்கிகள் மூலமாகவும் இந்த சான்றிதழை உறுதி செய்யலாம்.
இதையும் படிங்க.. வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது.. பிரபல வங்கி அறிவிப்பு!
மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கு வருடாந்திர சான்றளிப்பு நடவடிக்கை அவசியமானது. இந்த நடவடிக்கையை நிறைவு செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கும், சலுகை அடிப்படையில் கடந்த மாத ஓய்வூதியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.