Home /News /business /

பென்ஷன் வாங்குபவரா நீங்கள்? இப்படியொரு மாற்றம் வந்திருக்கு உங்களுக்கு தெரியுமா?

பென்ஷன் வாங்குபவரா நீங்கள்? இப்படியொரு மாற்றம் வந்திருக்கு உங்களுக்கு தெரியுமா?

 பென்ஷன்

பென்ஷன்

பென்ஷன் பணம் வாங்குவோரின் பாதுகாப்பை கருதி புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

    பொதுவாக பென்ஷன் வாங்குபவர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. பென்ஷன் வாங்குவோருக்கான வயது வரம்பு, பென்ஷன் தொகை, பென்ஷன் பெறுபவர்களின் தகவல்கள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு தெரிவித்து வந்திருந்தது. அந்த வகையில் பென்ஷன் பணம் வாங்குவோரின் பாதுகாப்பை கருதி புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

    மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் கடந்த திங்கள்கிழமை அன்று பென்ஷன் வாங்குவோருக்கான புதிய தொழில்நுட்பம் ஒன்றை, கொண்டு வந்துள்ளோம் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இனி பென்ஷன் வாங்குவோருக்கென்று தனித்துவமான 'முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம்' (face recognition technology) கொண்டு உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்த தொழில்நுட்பமானது ஓய்வூதியத்திற்கான 'வாழ்க்கைச் சான்றிதழின்' பாதுகாப்பிற்காக செயல்படும் மற்றும் வயதான காலத்தில் சுலபமான முறையில் வாழ்க்கை வாழ இது உதவும். எனவே பென்ஷன் வாங்கும் எல்லோரும் ‘life certificate' என்று கூறப்படும் வாழ்க்கைச் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் ஓய்வூதியமானது தடைபடக்கூடும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

    பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகமானது, இந்த சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பென்ஷன் வாங்குபவர்களுக்கு எந்தவித சிரமும் இன்றி அவர்களது வாழ்க்கையை வழிநடத்தும் வகையில் இவை அமைய வேண்டும் என்கிற தேவையை உணர்ந்து மத்திய அரசு செயல்படுகிறது.

    2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பென்ஷன் வாங்குபவர்களுக்களின் வாழ்க்கை சான்றிதழை டிஜிட்டல் மையமாக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். அந்த வகையில் தற்போது முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பென்ஷன் வாங்குவோருக்கு அறிமுகம் செய்துள்ளோம் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்த புது அறிவிப்பானது 68 லட்ச மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் மட்டுமன்றி, இபிஎஃப்ஓ பெறுபவர்கள் மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்ததற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆகியவற்றின் பெரும் உதவிக்கு ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்துள்ளார். மற்றும் இதனால் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறைக்கு பல மடங்கு நன்மை கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பென்ஷன் வாங்குபவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கவே இந்த முயற்சியை செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா காலங்களிலும் ஓய்வூதியம் பெறுவோரின் நலுனுக்காக ஓய்வூதிய நலத்துறையானது பல மறுசீரமைப்பு பணிகளை செய்து வந்துள்ளது. 'பவிஷ்யா' (Bhavishya) என்கிற மென்பொருள் உதவியோடு வாழ்க்கை சான்றிதழை டிஜிட்டல் மையமாக்க போவதாக தெரிவித்தார். மேலும் இந்த புதிய நடைமுறையை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த டிவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற அனைத்து சமூக ஊடகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும் மோடி கேட்டு கொண்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Pension Plan

    அடுத்த செய்தி