பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு... இனி நீங்கள் அந்த விஷயத்திற்கு சிரமப்பட வேண்டாம்!

பென்சன் அப்டேட்

பென்சனில் திருத்தங்கள் செய்வதும், மாற்றங்கள் செய்வதும் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது

  • Share this:
    அரசு வழங்கும் பென்சன் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கு.

    மத்திய அரசு நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு, ஓய்வு பெற்று விட்டு அதன் மூலம் வரும் பென்சனை வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ். இனி நீங்கள் அந்த விஷயத்திற்கு சிரமப்பட தேவையில்லை. எல்லாமே ஈஸியாகிவிட்டது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் மத்திய அரசு ஏக்கப்பட்ட மாற்றங்களை தளர்வுகளை செய்து வருகிறது. அந்த வகையில் பென்சன் திட்டத்திலும் மிக மிக முக்கியமான அவசியமான ஒரு மாற்றத்தை செய்துள்ளது. என்னவென்று பார்ப்போமா?

    ஏற்கெனவே வரிமான வரி தாக்கல் செய்வதில் அவகாசம் போன்ற பல்வேறு சலுகைகளை அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது அனைவரும் நினைவில் இருக்கும். அதன் ஒரு பகுதியாக பென்சன் பெறுபவர்களுக்கு இந்த முக்கிய அம்சத்தை அறிவித்துள்ளது. ஆம், இனி குடும்ப பென்சன் தொகையின் அதிகபட்ச வரம்பு ரூ.1.25 லட்சம் இதற்கு முன் இருந்த ரூ. 45,000 இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த குடும்ப பென்சனில் மத்திய அரசு ஊழியர்களான தாய் மற்றும் தந்தையின் குழந்தைகள் இனி இரண்டு பென்சன் பெறலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதாவது வேலை பணிபுரியும் போதும் மத்திய அரசு ஊழியர் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்தினர் அதாவது தாய், தந்தை கணவன்/மனைவி மற்றும் குழந்தைக்கு மாதம் பென்சன் வழங்கப்படும். இந்த புதிய மாற்றத்தின் படி ரூ.1.25 லட்சம் வரை அவர்கள் பெற தகுதியுடையவர்கள். இந்த குடும்ப பென்சனில் திருத்தங்கள் செய்வதும், மாற்றங்கள் செய்வதும் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் குடும்ப பென்சன் பெறுவதற்கான ஒப்புதல் பெறுவது, ஆவணங்களைச் சமர்ப்பிப்பதிலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . தேவையான ஆவணங்களை இணைத்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.நீங்கள் தயக்கமின்றி திருத்தங்களை செய்து மத்திய அரசின் சலுகையை அனுபவிக்க தயாராகுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: