ரிடையர்மெண்ட் வாங்கியவர்கள் இதில் பணத்தை சேமித்தால் என்னைக்குமே ராஜா தான்!

ஓய்வுதிய திட்டம்

இந்த திட்டம் ஓய்வு காலத்தில் நல்ல வருவாயுடன் கூடிய ஓய்வுதியத்தை வழங்கக்கூடியது.

  • Share this:
    ஓய்வு காலத்தில் நீங்கள் ராஜாவாக வாழ ஒரு மிகச் சிறந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். உங்களின் ரிடையர்மெண்ட்டுக்கு பிறகு நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்.

    நீங்கள் சமீபத்தில் ரிடையர்மெண்ட் வாங்கியவரா? அல்லது கூடிய விரைவில் ரிடையர்மெண்ட் வாங்க உள்ளீர்களா? அப்ப கண்டிப்பாக நீங்கள் தான் இந்த திட்டம் குறித்து கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, உங்களின் ரிடையர்மெண்டுக்கு பிறகும் நீங்கள் ராஜா போல் வாழ ஒரு வாய்ப்பு. அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான். பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா? 60 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஓய்வு காலத்தில் நல்ல வருவாயுடன் கூடிய ஓய்வுதியத்தை வழங்கக்கூடியது. நீங்கள் ஓய்வு பெற்ற பின் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள யாரையும் நம்பி பிழைத்திடலாம் கடைசி வரை உங்கள் பணத்தில் நீங்கள் ராஜாவாக வாழலாம்.

    அதற்கு முதலில் இந்த திட்டம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். 1800-227-717 என்ற எண்ணுக்கு அழைத்தால் இதுக் குறித்து முழு தகவலையும் நீங்கள் பெறலாம். இதுத்தவிர்த்து இந்த திட்டம் குறித்த பொதுவான தகவல்கள் அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,11,000 வரை ஓய்வூதியம் பெறலாம். பிக்சட் டெபாசிட் திட்டங்கள், முதலீடு திட்டங்கள் என நாடி செல்பவர்கள் இதையும் சற்று கவனத்தில் கொள்ளுங்கள். தற்போது இந்த திட்டம் பொதுமக்களுக்காக மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    60 வயதை எட்டிய தனிநபர்கள் இதில் முதலீடு செய்யலாம். அதே போல் வயதை காரணம் காட்டி ஓய்வு பெற்றவர்கள், 55 வயதுக்கு பின்னர் தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள்ம் ராணுவத்தில் இருந்து 50 வயதுக்கு பின்னர் ஓய்வு பெற்றவர்கள் ஆகியோரும் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீடு தொகை ரூ.15 லட்சம் நிர்ணியிக்கப்பட்டுள்ளது.பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தின் கீழ் ஓய்வூதிய சேவை வழங்க எல்ஐசி நிறுவனத்திற்கு மட்டுமே தற்போது வரை அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் பணத்திற்கு முழு பாதுகாப்பு உண்டு பயம் கொள்ள வேண்டாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த திட்டத்தில் முதலீடு செய்த பின்பு மூத்த குடிமக்கள் ஓய்வுதியம் பெற விரும்பும் முறையை 4 விதத்தில் தேர்ந்தெடுக்கலாம். அதாவது மாத பென்சன், ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு அரையாண்டும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் என 4 விருப்பத்தேர்வுகள் உள்ளன. முதலீடு பொருத்தவரையில், மாதம் பென்சன் வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1.62 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

    காலாண்டு ஓய்வூதியத்திற்கு ரூ.1.61 லட்சம், ஆறு மாதங்களுக்கு ரூ.1.59 லட்சம் மற்றும் ஆண்டு ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 1.56 லட்சம் முதலிடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,250 ஆகும். காலாண்டு ஓய்வூதியம் ரூ.27,750, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.55,500 மற்றும் அதிகபட்ச ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,11,000 பெறலாம். எனவே, உங்கள் ரிடையர்மெண்ட் பணத்தை வீணாக்காமல் இந்த திட்டத்தில் முதலீடு செய்து ஆண்டு முழுவதும் ராஜாவாக வாழ்ந்திடுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: