Home /News /business /

வருமான வரி ரீஃபண்டு பெறுகிறீர்களா? சான்றுகள் இல்லையென்றால் 200% அபராதம்!

வருமான வரி ரீஃபண்டு பெறுகிறீர்களா? சான்றுகள் இல்லையென்றால் 200% அபராதம்!

TDS சான்று போலியாக இருந்தால் அபராதம்

TDS சான்று போலியாக இருந்தால் அபராதம்

Income Tax Refund : TDS கூடுதலாக பிடித்தம் செய்யப்படுபவர்களுக்கு, அந்த கூடுதல் தொகை ரீஃபண்ட் வழங்கப்படும். அதில் சரியான சான்றுகள் இல்லையென்றால் 200% அபராதம் விதிக்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வரி செலுத்துபவர்கள் மட்டும் தான் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. சம்பளம் அல்லது காண்ட்ராக்ட் வேலையில் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி TDS என்று முன்கூட்டியே பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு TDS பிடித்தம் செய்யப்பட்ட நபர்களுக்குக் கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த தொகையை ரீஃபண்ட் பெறுவதற்காகவும் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது உங்கள் ITR விலக்குகள், முதலீட்டுக்கான ரசீதுகள் உள்ளிட்டவை சரிபார்க்கப்படும். அதற்கு உரிய  சான்றுகளை நீங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால், அல்லது போலியாக   குறிப்பிட்டிருந்தால், 200% அபராதம் செலுத்த வேண்டும்.

    வருமான வரி தாக்கல் செய்தாலும் அபராதம்

    ஆடிட்டரின் தணிக்கை தேவைப்படாத வருமான வரி கணக்குகள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் வரி செலுத்த வேண்டிய மொத்த வருமானத்தின் அடிப்படையில் தாமதமாக வருமானவரி பதிவு செய்யும் கட்டணம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    எப்படிக் கூடுதலாக TDS பிடித்தம் செய்யப்படும்?

    சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு TDS என்று வருமானவரி முன்கூட்டியே ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்பட்டாலும் பல்வேறு விலக்குகள், வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளக் கூடிய செலவுகள், முதலீடுகள், ஆகியவற்றையும் ITR தாக்கல் செய்யும் போது சேர்த்துக் கொள்ளலாம். இந்த விவரங்களை ஊழியர் வேலை செய்யும் நிறுவனங்களிடம் தெரிவிக்காத நிலையில், கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டு, ITR பதிவு செய்யும் போது வித்தியாசம் காணப்படும்.

    இதனால் கூடுதலாக TDS பிடித்தம் செய்யப்படுபவர்களுக்கு, அந்த கூடுதல் தொகை ரீஃபண்ட் வழங்கப்படும். இன்சூரன்ஸ், குழந்தைகளின் பள்ளி கட்டணம், உயர் கல்வி, மருத்துவச் செலவுகள், வீட்டுக் கடன், உள்ளிட்ட செலவுகளுக்கு விலக்கு பெற முடியும்.

    இந்த விவரங்களை, உங்கள் நிறுவனத்திடம் நீங்கள் வழங்காமலிருந்தால் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட தொகையிலும் நீங்கள் வருமான வரி கணக்கு செய்து எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்ற தொகையிலும் வித்தியாசம் ஏற்படும்.

    சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, அவர்களின் நிறுவனம் படிவம் 16 என்ற TDS பிடித்தம் செய்யப்பட்டு, வருமான வரித்துறைக்கு கட்டப்பட்ட வரி விவரங்களை வழங்கும். அதில் உள்ள விவரங்களும், வருமான வரி தாக்கல் செய்யும் பொழுது ஒரு நபர் அளித்துள்ள விவரங்களும் வித்தியாசமாக இருந்தால், வரி ரீபண்ட் பெறலாம்.படிவம் 16 இல் வித்தியாசம் இருப்பவர்களுக்கு அறிவிப்பும், 15 நாள் அவகாசமும்

    ஏற்கனவே வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தவர்களுக்கு இவ்வாறு உள்ள வித்தியாசம் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    படிவம் 16ல் இருக்கும் விவரங்களும் வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களும் வெவ்வேறாக இருப்பதால் இதை உறுதி செய்வதற்காகவே இவர்களுக்கு இந்த நோட்டிபிகேஷன் அறிவிக்கப்பட்டுள்ளது என்று மூத்த ஆடிட்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Also Read : அன்று ஐடி ஊழியர்..இன்று 199க்கு அளவில்லா பீட்ஸா விற்கும் முதலாளி.. கலக்கும் பஞ்சாபி சர்தார்..

    நீங்கள் முதலீடு செய்த தொகைக்கான சான்றுகள் மற்றும் ரசீதுகளை வழங்கினாலே போதுமானது. ஒவ்வொரு நபரின் வருமான வரி அறிக்கையும் ஆய்வு செய்யப்படும். அதில் காணப்படும் வேறுபாடுகள் மற்றும் சான்று இல்லாத விவரங்கள் சார்ந்து வருமான வரித்துறையிலிருந்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். எனவே அதற்கு முன்னதாகவே நீங்கள் தாக்கல் செய்துள்ள வருமான வரி அறிக்கை சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக இந்த 15 நாள் கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

    நீங்கள் எந்தெந்த செலவுகளுக்கு அல்லது முதலீடுகளுக்கு விலக்கு பெற்று வருமான வரி தாக்கலை மேற்கொண்டு உள்ளீர்களோ அதற்கான சான்றுகளை வழங்க வேண்டும். ஒருவேளை போலியாகச் சான்றுகள் தயாரித்து அல்லது சான்றுகள் இல்லாமல் செலவினங்களை மட்டும் குறிப்பிட்டு வருமானவரி அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்று ரீஃபண்ட் கோரி இருப்பது கண்டறியப்பட்டால் 200% அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஒரு சிலர் இத்தகைய அறிக்கையைப் பெற்ற ஒருசிலருக்கு வருமான வரித்துறையிலிருந்து ‘நோட்டிஸ்’ வந்துள்ளது என்று அச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் இது அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Income tax

    அடுத்த செய்தி