Paytm வெளியிட்ட புதிய அம்சம்: இனி கிரெடிட் கார்டு வழியாக ரூ.1000 கேஷ்பேக் வசதியுடன் வீட்டு வாடகையை செலுத்தலாம்!

Paytm வெளியிட்ட புதிய அம்சம்: இனி கிரெடிட் கார்டு வழியாக ரூ.1000 கேஷ்பேக் வசதியுடன் வீட்டு வாடகையை செலுத்தலாம்!

பேடிஎம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    வாடிக்கையாளர்களுக்கு பேமென்ட் வசதியை இன்னும் எளிதாக்கும் வகையில், டிஜிட்டல் நிதிச் சேவை தளமான Paytm அதன் வாடகை கொடுப்பனவு அம்சத்தின் (Rent Payments feature) விரிவாக்கத்தை அறிவித்துள்ளது.

    இந்த புதிய அம்சத்துடன், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டு வாடகையை நில உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் கிரெடிட் கார்டுகள் மூலம் நேரடியாக அனுப்ப முடியும். மேலும், இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ.1000 வரை கேஷ்பேக் பெறும் வசதியையும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் கேஷ்பேக் கிடப்பது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு புள்ளிகளையும் (credit card points) பெற முடியும்.

    இருப்பினும், Paytm வழியாக கிரெடிட் கார்டு மூலம் வாடகை (Home rent payment) செலுத்துபவர்கள் 1.65 சதவீத கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக உங்கள் வாடகை ரூ.10,000- ஆக இருந்தால், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் ரூ.10,165 செலுத்த வேண்டும். இருப்பினும், யுபிஐ, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் மூலம் வாடகை செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம்
    வசூலிக்கப்படுவதில்லை.

    வாடகை செலுத்தும் முறை:

    வாடகை பரிவர்த்தனை செயல்முறையை பற்றியும் நிறுவனம் அறிவித்துள்ளது.

    * முதலில் Paytm யூசர்கள் வீட்டு வாடகையை செலுத்துவதற்கு முன்பு தங்களது செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

    * பின்னர் Paytm முகப்புத் திரையில் உள்ள “ரீசார்ஜ் & பே பில்கள்” (Recharge & Pay Bills) பிரிவில் சென்று அதில் காணப்படும் “வாடகை கொடுப்பனவை” (Rent Payment) தேர்ந்தெடுக்க வேண்டும்.

    * பின்னர் Proceed என்பதைக் கிளிக் செய்து, நில உரிமையாளரின் வங்கி கணக்கின் விவரங்களை உள்ளிட வேண்டும். வங்கிக் கணக்கை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

    * அடுத்ததாக வாடகை செலுத்த வேண்டிய தொகையை உள்ளிட வேண்டும்.

    *அதன் பிறகு நீங்கள் கட்டண பயன்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, நீங்கள் கிரெடிட் கார்டு (credit card), யுபிஐ, டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் மூலம் பணம் செலுத்தலாம்.

    * நீங்கள் ஏதேனும் ஒரு பயன்முறையை பயன்படுத்தி வாடகை செலுத்திய பிறகு, அந்த பணம் நில உரிமையாளர் வங்கி கணக்கிற்கு அதிகபட்சம் 2 முதல் 3 நாட்களுக்குள் சென்றுவிடும்.

    Also read... Gold Rate: ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கத்தில் விலை... மாலை நிலவரம் என்ன?

    Paytm-ல் உள்ள டாஷ்போர்டு அனைத்து உங்களது வாடகை பேமெண்ட்டுகளையும் கண்காணிக்க உதவுகிறது. மேலும் கட்டணம் செலுத்த வேண்டிய தேதிகளையும் நினைவூட்டுகிறது. அதேபோல நில உரிமையாளர்களுக்கு உடனடி கட்டண உறுதிப்படுத்தலையும் அனுப்புகிறது. இந்தியா முழுவதும், யுடிலிட்டி பில்கள், கிரெடிட் கார்டு பில்கள் என யூசர்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத அனைத்து தொடர்ச்சியான பேமெண்ட்டுகளையும் செய்ய நிறுவனம் வசதிகளை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் கல்வி கட்டணம், வீட்டு உதவி சம்பளம் போன்ற கட்டணங்களை கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: