முகப்பு /செய்தி /வணிகம் / Paytm யூசர்கள் கவனத்திற்கு.. கோவிட் தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் பற்றிய முக்கிய அப்டேட்

Paytm யூசர்கள் கவனத்திற்கு.. கோவிட் தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் பற்றிய முக்கிய அப்டேட்

பேடிஎம்

பேடிஎம்

Paytm app-ஐ ஓபன் செய்து சர்ச் ஐகானை tap செய்து Vaccine Finder என டைப் செய்யவும்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

paytm: இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்திய கோவிட்-19 தடுப்பூசி ஃபைன்டர் பிளாட்ஃபார்மில் (Covid-19 vaccine finder platform) புதிய அம்சத்தை சேர்த்துள்ளதாக Paytm அறிவித்து உள்ளது. தற்போது தாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய சேவை தடுப்பூசி ஃபைன்டர் app-ல் இருந்து யூஸர்கள் தங்கள் சர்வதேச பயண சான்றிதழ்களை (international travel certificates) டவுன்லோட் செய்ய அனுமதிக்கும் என்று Paytm கூறி இருக்கிறது. சமீபத்தில் அதன் Mini App Store-ல் உள்ள COVID-19 Vaccine Finder மூலம் சர்வதேச COVID தடுப்பூசி சான்றிதழ்களை app-ல் டவுன்லோட் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இதன் மூலம் WHO-DDCC: VS compliant vaccination certificates-களை பெற யூஸர்கள் தங்கள் பாஸ்போர்ட் விவரங்களை புதுப்பிக்கலாம் என்றும் Paytm கூறியுள்ளது. "கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டுஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தி கொண்டதை உள்ளடக்கிய பயணச் சான்றிதழ்கள் இப்போது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளால் ஏற்று கொள்ளப்படுகின்றன. இருப்பினும், பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன், நாடு சார்ந்த கோவிட்-19 வழிகாட்டுதல்களை சரிபார்த்து கொள்வது நல்லது" என்று Paytm பரிந்துரைத்து உள்ளது.

இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Paytm-ன் Covid-19 Vaccine Finder அம்சம், யூஸர்கள் தங்களுக்கு அருகில் தடுப்பூசி மையங்கள் மற்றும் ஸ்லாட்டுகள் உள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது. யூஸ்ர்கள் PIN கோட்ஸ் அல்லது மாவட்டங்களின் அடிப்படையில் ஸ்லாட்டுகளுக்கு புக் செய்யலாம் மற்றும் டூலை பயன்படுத்தி நேரடியாக இடங்களை பதிவு செய்யலாம். தங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தை 11 மொழிகளில் தேட யூஸர்களை அனுமதிக்கிறது. Paytm வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில், சர்வதேச கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களைப் பெற, யூஸர்கள் தங்கள் பாஸ்போர்ட் விவரங்களை app-ல் அப்டேட் வேண்டும் என்று சுட்டிக்காட்டி உள்ளது.

Paytm-ல் சர்வதேச கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை டவுன்லோட் செய்வது எப்படி.?

* Paytm app-ஐ ஓபன் செய்து சர்ச் ஐகானை tap செய்து Vaccine Finder என டைப் செய்யவும். இதை கண்டறிய மற்றொரு வழியாக நீங்கள் app-ஐ கீழே ஸ்க்ரோல் செய்யலாம்.

* COVID-19 Vaccine Slot Finder-ன் உள்ளே, கீழே ஸ்க்ரோல் செய்து, “Download Certificates” என்பதை tap செய்யவும்

* பின் CoWIN போர்ட்டலில் ரிஜிஸ்டர்ட் செய்யப்பட்ட உங்கள் மொபைல் என்டர் செய்து OTP மூலம் அங்கீகரிக்கவும்.

* உங்கள் சான்றிதழை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை பெற்றவுடன், லிங்க் ஐகானை tap செய்வதன் மூலம் உங்கள் பாஸ்போர்ட்டை லிங்க் செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும்.

* பின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாஸ்வேர்ட் நம்பரை என்டர் செய்து, 'Submit request' பட்டனை tap செய்யவும்

* இறுதியாக நீங்கள் vaccine download page-க்கு ரீடைரக்டட் செய்யப்படுவீர்கள். அந்த பேஜில் International Travel Certificate-ஐ டவுன்லோட் செய்து கொள்வதற்கான ஆப்ஷனை பெறுவீர்கள். சான்றிதழின் PDF காப்பியை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona Vaccine, Money, Paytm