Home /News /business /

அந்த மாதிரி சீன ஆப்களோடு எங்களுக்கு தொடர்பு இல்லை... சிக்கலில் சிக்கிய Paytm.!

அந்த மாதிரி சீன ஆப்களோடு எங்களுக்கு தொடர்பு இல்லை... சிக்கலில் சிக்கிய Paytm.!

பேடிஎம்

பேடிஎம்

Paytm | சீனாவைச் சேர்ந்த சில கடன் வழங்கும் ஆப்-கள் சிறிய தொகையை கடனாக பெறும் இந்திய மக்களிடம் அதிக வட்டியை வசூலிப்பது, அவரது தனிப்பட்ட தகவலை பெற்றுக்கொண்டு பணம் செலுத்திவிட்டதாக ஏமாற்றுவதாக, கடனை திரும்ப செலுத்தாதவர்களை தொலைபேசி மூலம் மிரட்டுவது போன்ற சட்டவிரோதமான செயல்களை செய்துவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் நிறைய கடன் செயலிகள் கொடுத்த கடனை முறையற்ற வகையில் வசூலிப்பதாகவும், கடன் கொடுக்காமலேயே பணத்தை கிரெடிட் செய்துவிட்டதாக கூறி பயனர்களை மிரட்டி வசூலில் ஈடுபடுவதாகவும் புகார்கள் குவிந்தன. சீனாவைச் சேர்ந்த சில கடன் வழங்கும் ஆப்-கள் சிறிய தொகையை கடனாக பெறும் இந்திய மக்களிடம் அதிக வட்டியை வசூலிப்பது, அவரது தனிப்பட்ட தகவலை பெற்றுக்கொண்டு பணம் செலுத்திவிட்டதாக ஏமாற்றுவதாக, கடனை திரும்ப செலுத்தாதவர்களை தொலைபேசி மூலம் மிரட்டுவது போன்ற சட்டவிரோதமான செயல்களை செய்துவந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த பலரும் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமாக உருவெடுத்தது.

இதுதொடர்பாக விசாரணையில் இறங்கிய பெங்களூர் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் 18 வழக்குகளைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஆப்கள் குறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது கடன் செயலிகள் பலவும் சீன சர்வர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது கண்டறிப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, சீன கடன் ஆப்களுடன் இணைந்து பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ரேசர் பே பிரைவேட் லிமிடெட் (Razorpay Pvt Ltd), பேடிஎம் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட், கேஷ்ஃப்ரி பேமெண்ட்ஸ் ( Cashfree Payments) போன்ற நிறுவனங்களில் பெங்களூரு அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் உள்ள 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சீன கடன் ஆப் மற்றும் அதற்கு தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து 17 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.



இதனைத் தொடர்ந்து மத்திய புலனாய்வு நிறுவனம் நடத்திய விசாரணையில், இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி போலி இயக்குநர்களை உருவாக்கி, அதனை சீன நபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வைத்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும் மத்திய புலனாய்வுத்துறை நடத்தி வரும் விசாரணையில் ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, பேடிஎம் ஆகிய நிறுவனங்களும் இணைக்கப்பட்டன.

Also Read : UPI பேமெண்ட் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய 5 பாதுகாப்பு அம்சங்கள்

இந்நிலையில், Paytm பிராண்டின் கீழ் இயங்கும் டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் அமலாக்கத்துறையினரின் சீன கடன் ஆப்-கள் பற்றிய மோசடி விவகாரத்தில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. அதேபோல் சோதனையின் போது அமலாக்கத்துறை கைப்பற்றிய நிதி எதுவும் பேடிஎம் அல்லது அதன் குழுவைச் சேர்ந்த பிற நிறுவனங்களுக்கு சொந்தமானது இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.



பேடிஎம் தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில், "கடன் வழங்கும் ஆப்-கள் பற்றிய தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, நாங்கள் பணம் செலுத்தும் செயலாக்க தீர்வுகளை வழங்கும் வணிகர்களைப் பற்றிய தகவல்களை ED கோரியுள்ளது. அப்படி நாங்கள் பணம் செலுத்தும் எந்த சீன கடன் செயலி தொடர்பான நிறுவனத்துடனும் எங்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம்” எனக்குறிப்பிட்டுள்ளது.

Also Read : டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... 

வாடிக்கையாளர்கள் - கடன் ஆப் இடையே பேமெண்ட்டை அனுப்பும் கேட்வேவாக மட்டுமே செயல்பட்டதாக பேடிஎம் நிறுவனம் கூறினாலும், மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்திற்கு பேடிஎம் கொண்டு வரப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Loan app, Paytm

அடுத்த செய்தி