சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்- வேதனையில் பேடிஎம்..!

பேடிஎம் நிறுவனத்துக்கு தற்போதைய சூழலில் 14 மில்லியன் ஸ்டோர்கள் நாடு முழுவதும் உள்ளன.

Web Desk | news18
Updated: September 10, 2019, 7:37 PM IST
சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்- வேதனையில் பேடிஎம்..!
பேடிஎம்
Web Desk | news18
Updated: September 10, 2019, 7:37 PM IST
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமன ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.

ஒன்97 நிறுவனம் 2017-18 நிதியாண்டில் 1,604.34 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. ஆனால், 2018-19 நிதியாண்டில் மும்மடங்கு கூடுதலாக 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதன் தாக்கத்தால் ஒன்97-ன் துணை நிறுவனங்களான பேடிஎம் மனி, பேடிஎம் பைனான்ஸ் சர்வீஸ், பேடிஎம் எண்டர்டெயின்மெண்ட் சேவை ஆகியனவும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

பேடிஎம் நிறுவனம் கடந்த 2018-ம் நிதியாண்டில் 3,309.61 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு வருவாய் 8.2 சதவிகிதம் உயர்ந்து 3,579.67 கோடி ரூபாய் ஆனது. பிராண்ட் பெயரை வளர்க்கவும் தொழிலை விரிவாக்கவும் செலவழித்துதான் பேடிஎம் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2018 நிதியாண்டைவிட 2019 நிதியாண்டில் செலவும் 4,864.53 கோடி ரூபாயிலிருந்து 7,730.14 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளதே நஷ்டத்துக்குக் காரணம்.


இதையே தனது நஷ்டத்துக்கான முக்கியக் காரணம் என பேடிஎம் நிறுவனமும் தனது வருடாந்திர பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனத்துக்கு தற்போதைய சூழலில் 14 மில்லியன் ஸ்டோர்கள் நாடு முழுவதும் உள்ளன.

மேலும் பார்க்க: இந்தியாவில் பிட்காயின் முதலீடு சட்டப்பூர்வமானதா? க்ரிப்டோகரன்ஸி நடைமுறைகள் என்ன?

உயருகிறது மின் இணைப்பு டெபாசிட், பதிவுக் கட்டணம்!

Loading...

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...