• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வீழ்ந்த பேடிஎம் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர்கள் நிதி வசூல்..!

வீழ்ந்த பேடிஎம் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர்கள் நிதி வசூல்..!

பேடிஎம்

பேடிஎம்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வீழ்ச்சியில் பயணித்துக் கொண்டிருந்த பேடிஎம் நிறுவனத்துக்கு தற்போது முதலீட்டார்கள் மூலம் 1 பில்லியன் (100 கோடி) அமெரிக்க டாலர்கள் நிதியாகக் கிடைத்துள்ளது.

    நிதி மதிப்பு குறித்து இதுவரையில் பேடிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. பேடிஎம் நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள சாஃப்ட்பேங்க் விஷன் ஃபண்ட் மற்றும் அலிபாபா ஆண்ட் பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்தும் முதலீடு கிடைத்துள்ளது.



    பேடிஎம் பணப்பரிவர்த்தனைக்காக மட்டுமல்லாது வரும் காலங்களில் கடன், இன்சூரன்ஸ், முதலீடுகள், பங்குச்சந்தை ஆகிய தளங்களின் கீழும் இயங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பேடிஎம் நிறுவனர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும் பார்க்க: வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை... 12 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி!

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: