ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். தாங்கள் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கியின் இன்டர்நெட் பேங்கிக் சேவை அல்லது யூபிஐ பேமெண்ட் வசதியை அடிப்படையாகக் கொண்ட பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களை பயன்படுத்துவார்கள்.
ஆனால், இதுபோன்ற இன்டர்நெட் பேங்கிங் சேவைகள் அல்லது ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாத சாமானிய மக்கள் எந்தவித டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் செய்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற மக்களை புதிய வாடிக்கையாளர்களாக கவரும் விதத்திலும், அனைவரையும் டிஜிட்டல் சேவைகளில் இணைக்கும் விதத்திலும் புதிய வசதி ஒன்றை பேடிஎம் செயல்படுத்தியுள்ளது. அதாவது வியாபாரிகளிடம், இ-ரூபி என்ற ப்ரீபெய்டு வவுச்சர்களை கொடுத்து சேவைகளை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை இந்த நிறுவனம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இ-ரூபி என்பது இந்திய அரசு அறிமுகம் செய்த திட்டம் ஆகும். இதன் கீழ், கேஷ்லெஸ் ப்ரீபெய்டு வவுச்சர்களை பயனாளிகள் எஸ்எம்எஸ் அல்லது க்யூஆர் கோட் மூலமாக செலுத்த முடியும். இதனை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் அமலுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், பேடிஎம் சேவையில் இணைந்து வியாபாரிகள் இந்த ப்ரீபெய்டு வவுச்சர்களை ஸ்கேன் செய்து, தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள முடியும்.
இதையும் படியுங்கள் : ‘Suspicious Files’ எனக் கூறி டவுன்லோடு செய்ய மறுக்கிறதா கூகுள் குரோம் - இதை சரி செய்வது எப்படி
இ-ரூபி திட்டத்தின் பலன் என்ன :
இந்தத் திட்டத்தை பயன்படுத்த விரும்பும் பயனாளியிடம் ஸ்மார்ட்ஃபோன் அல்லது இன்டர்நெட் பேங்கிங் போன்ற சேவைகள் இல்லை என்ற கவலையே தேவையில்லை. இந்த வசதிகள் இல்லாத பயனாளிகளும் கூட இ-ரூபி திட்டத்தின் மூலமாக டிஜிட்டல் பேமெண்ட்களை செய்ய முடியும்.
அதிகபட்ச வரம்பு :
இ-ரூபி திட்டத்தின் கீழ் வவுச்சர்களின் அதிகபட்ச மதிப்பு இதற்கு முன்பு ரூ.10,000 ஆக இருந்தது. தற்போது இது ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் எகனாமி திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்த கேஷ்லெஸ் பேமெண்ட் திட்டம் அறிமுகம் சேய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : Motorola Premium Moto Edge 30 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, அம்சங்கள்!
பேடிஎம் வழங்கும் இதர சேவைகள் :
பயனாளர்களின் வங்கி அக்கவுண்ட்க்கு நேரடியாக பணம் சென்று சேரும் வகையில் டிபிடி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த சேவையை பேடிஎம் தனது வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சமையல் எரிவாயு மானியம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியம், முதியோருக்கான ஓய்வூதியம், கல்விக்கான உதவித்தொகை போன்ற அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளின் வங்கி அக்கவுண்டில் பணம் பெற்றுக் கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக பேடிஎம் அறிமுகம் செய்யும், யூபிஐ வங்கி சேவை, ஃபாஸ்ட் டேக் போன்ற பல்வேறு வசதிகளின் காரணமாக டிஜிட்டல் பேமெண்ட் துறையில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமாக பேடிஎம் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.