Home /News /business /

நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோங்க.. இந்த வங்கியில் இனி புது அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியாது!

நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோங்க.. இந்த வங்கியில் இனி புது அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியாது!

பேடிஎம் பேங்க்

பேடிஎம் பேங்க்

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என ரிசர்வ் வங்கி திடீரென உத்தரவிட்டுள்ளது.

    பேடிஎம் பேமெண்ட்ஸ் (paytm payments) வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த வங்கியில் தற்சமயம் வாடிக்கையாளர்களால் புதிய அக்கவுண்டை ஓபன் செய்ய முடியாது.

    இன்றைய அவசர உலகில் இணைய வழி வர்த்தக் சேவை மிகப் பெரிய பங்காற்றுகிறது. முன்பெல்லாம் கையில் பணம் இருந்தால் தான் எதையும் வாங்க முடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை செல்போன் இருந்தாலே போதும் டீ கடை தொடங்கி வீட்டு பக்கத்தில் இருக்கு பெட்டி கடை வரையில் எது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். அந்த அளவுக்கு யுபிஐ பேமெண்ட் முறைகள் வர்த்தக்கத்தை ஈஸியாக்கிவிட்டனர். அதில் குறிப்பிடும்படியாக சொல்ல வேண்டும்மென்றால் பேடிஎம்
    இணைய வழி வர்த்தகம். வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது பல மாற்றங்களை, அப்டேட்டுகளை, ஆஃபர்களை இந்த நிறுவனம் வழங்கும். இதில் பணப்பரிவர்த்தனை மிகவும் ஈஸியாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

    இதையும் படிங்க.. epfo : உங்கள் குடும்பத்திற்கு ரூ. 7லட்சம் வரை கிடைக்கும்.. பிஎஃப் கணக்கில் இதை செய்தால் மட்டும் போதும்!

    சமீபத்தில் தான் இந்த நிறுவனம் பேடிஎம் பேமன்ட் பேங்க் சேவையை துவங்கி இருந்தது. இதன் மூலம் இணைய வழி பணப்பரிவர்த்தனை எளிய வழியில் செய்ய முடியும். இதில் கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகையும் பேடிஎம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பேடிஎம் பேமெண்ட் பேங்கில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அதற்கான காரணத்தில் ஆர்பிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    அதாவது ரிசர்வ் வங்கி விதித்த விதிமுறைகளை இந்த நிறுவனம் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1949-ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பண பரிவர்த்தனை தொடர்பான ரிசர்வ் வங்கி சில முக்கிய விதிமுறைகளை விதித்து இருந்தது. இந்த விதிமுறைகளை பேடிஎம் நிறுவனம் முறையாக பின்னப்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த காரணத்திற்காக வருமான வரி தணிக்கை ஆய்வறிக்கையின் அடிப்படையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் தனது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என ரிசர்வ் வங்கி திடீரென உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க.. அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.8 லட்சம் வரை தர்றோம்.. அறிவிப்பு வெளியிட்ட பிரபல வங்கி!

    இந்தியாவில் தற்போது முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான வளர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் தற்சமயம் புதிய கணக்கை வாடிக்கையாளர்களால் தொடங்க முடியாது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Paytm, RBI, UPI

    அடுத்த செய்தி