ஹோம் /நியூஸ் /வணிகம் /

paytm : ரூல்ஸை பின்பற்றாத காரணத்தினால் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்குக்கு ரூ.1 கோடி அபராதம்!

paytm : ரூல்ஸை பின்பற்றாத காரணத்தினால் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்குக்கு ரூ.1 கோடி அபராதம்!

பேடிஎம்

பேடிஎம்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கிற்கு (Paytm Payments Bank), அதிரடியாக பெரும் தொகையை அபராதமாக விதித்து உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

  முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் அமைப்பு சட்டம் 2007-ன் விதிகளை (Payment and Settlement Systems Act 2007) மீறிய குற்றத்திற்காக பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கிற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

  இது தவிர பண வரம்பை மீறிய காரணத்திற்காக வெஸ்டர்ன் யூனியன் நிதிச் சேவை நிறுவனத்திற்கும் (Western Union Financial Services company) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வெஸ்டர்ன் யூனியன் நிதிச் சேவை நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ரூ.27.8 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் இறுதி அங்கீகார சான்றிதழை வழங்குவதற்கான விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்கள், அந்த வங்கியின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்பதால் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கிற்கு ரூ.1 கோடி அபராதம் விதிப்பதாக ரிசர்வ் வாங்கி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த விதிமீறல் பணம் மற்றும் தீர்வு அமைப்பு சட்டம், 2007 (PSS Act) செக்ஷன் 26 (2) -ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்று ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இறுதி அங்கீகார சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறையின் போது, Paytm Payments Bank-ன் விண்ணப்பத்தை ஆராய்ந்த அதிகாரிகள், அந்த பேங்க் சமர்ப்பித்த தகவல்களில் உண்மை நிலை பிரதிபலிக்காததை கண்டறிந்ததாக ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.

  இதனை தொடர்ந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் நடைபெற்ற தனிப்பட்ட விசாரணையின் போது எழுதப்பட்ட பதில்கள் மற்றும் வாய்வழி பதில்கள் உள்ளிட்டவற்றை கவனமாக மதிப்பாய்வு செய்ததாகவும், அதில் மேற்கூறிய குற்றசாட்டு ஆதாரபூர்வமாக நிரூபனமானதாகவும் ரிசர்வ் வங்கி கூறியது. இதனை அடுத்தே பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கிற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

  சம்பளம் வாங்கும் போது ரூ.1000 சேமித்தால் போதும்.. ரூ. 5 லட்சம் உங்கள் கையில்!

  அதே போல கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ஒரு வாடிக்கையாளருக்கு 30 பணப்பரிமாற்றங்கள் என்ற உச்சவரம்பை மீறியதால் வெஸ்டர்ன் யூனியன் ஃபைனான்சியல் சர்வீசஸிற்கு ரூ.27.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்டர்ன் யூனியன் நிதிச் சேவை நிறுவனம் மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள அபராதங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாக கொண்டவை என்றும் RBI விளக்கம் அளித்துள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: RBI