ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவில் மொபைல் பேமெண்ட்களின் முன்னோடியாக Paytm உள்ளது..! நுகர்வோரின் சிறந்தத் தேர்வாக Paytm UPI இருப்பதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வோம் வாருங்கள்.!

இந்தியாவில் மொபைல் பேமெண்ட்களின் முன்னோடியாக Paytm உள்ளது..! நுகர்வோரின் சிறந்தத் தேர்வாக Paytm UPI இருப்பதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வோம் வாருங்கள்.!

பேடிஎம்

பேடிஎம்

Paytm | உங்கள் KYC தேவையைப் பூர்த்தி செய்யாமலேயே Paytmயில் UPI பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.மேலும், Paytm UPI பரிவர்த்தனைகளை எந்தவிதமான கட்டணங்களும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்று நம் அன்றாட வாழ்க்கையில் பரிவர்த்தனைகளைக் கையாள மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாக UPI செயலிகள் உள்ளன. காசோலைகள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் போன்ற பாரம்பரிய பணப் பரிமாற்றங்களை மையமாகக் கொண்ட புதிய தொழில்நுட்பமாக UPI உள்ளது. இதன் விரைவான மற்றும் தொந்தரவில்லாத பணப் பரிமாற்ற முறை ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும் கிட்டத்தட்ட அனைவருக்கும் நிலுவைத் தொகையைச் சரியாகச் செலுத்துவதை முன்னெப்போதையும் விட எளிதாக்கியுள்ளது.

  சிறந்த UPI செயலியைத் தேர்வுசெய்தல்

  UPI செயல்திறனைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், UPI மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள எந்தச் செயலி மிகவும் பொருத்தமானது என்பது நமக்கு அடிக்கடி தோன்றும் கேள்விகளில் ஒன்றாகும். எந்த செயலி சிறந்த பலன்களை வழங்குகிறது என்பதைத் தீர்மானிக்கும் முன் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இடைமுகம், மோசடி நடந்தால் சரிசெய்தல் மற்றும் பரிவர்த்தனைகளைப் பற்றி தெரிந்துகொள்ள கணக்குகளின் எளிய அறிக்கை போன்ற முக்கிய அம்சங்கள் இதில் அடங்கும்.

  எல்லா டிஜிட்டல் செயலிகளும் இந்தச் சேவைகள் அனைத்தையும் வழங்குவதில்லை, ஆனால் ஒரே ஒரு செயலி மட்டும் இவை அனைத்தையும் செய்கிறது, மேலும் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பெரிதும் விரும்பப்படுகிறது, அதுதான் Paytm. உங்களின் அனைத்து UPI தேவைகளுக்கும் ஏன் Paytmஐப் பயன்படுத்தத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

  Paytm UPI செயலி ஏன் சிறந்தது

  1 – சிறந்த பாதுகாப்பு

  டிஜிட்டல் முறையில் ஒருவருக்கு பணம் அனுப்பும்போது  நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பாதுகாப்புதான். பாதுகாப்பான UPI செயலியை உருவாக்கி, உங்கள் Paytmயின் உள்நுழைவு கடவுச்சொல் மற்றும் உங்கள் வங்கியின் பாதுகாக்கப்பட்ட UPI பின் இரண்டையும் பயன்படுத்தி இருமுறை அங்கீகாரத்துடன் அனைத்து UPI பரிவர்த்தனைகளையும் பாதுகாப்பதன் மூலம், Paytm இந்தப் பாதுகாப்புச் செயல்முறையில் முன்னணியில் உள்ளது. கூடுதலாக ஒரு தகவல், உங்கள் OTP அல்லது கடவுச்சொல்லை தெரியாத நபருடனோ அடையாளம் தெரியாத அழைப்பாளருடனோ ஒருபோதும் பகிர வேண்டாம். 

  Paytm செயலி மூலம் உங்கள் வங்கி UPIஐ அமைப்பதற்கான விரைவான வழியை இங்கே கண்டறியுங்கள்:

  முதலில் Paytm செயலியைப் பதிவிறக்கம் செய்து SMS மூலம் உங்கள் மொபைல் எண்ணைச் சரிபாருங்கள். இதைத் தொடர்ந்து, செயலியில் கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட அதே மொபைல் எண்ணைதான் செயலியில் பதிவுசெய்துள்ளீர்கள் என்பதை உறுதிசெய்யவும். முதல் முறையாக உங்கள் UPI பின்னை அமைக்கிறீர்கள் எனில், உங்கள் டெபிட் கார்டு விவரங்களைத் தயாராக வைத்திருங்கள். உங்கள் பின்னை அமைத்த உடன் Paytm செயலியில் UPIஐப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

  2 – மிகவும் எளிதாகப் பயன்படுத்தலாம்

  Paytm செயலியில் UPI மூலம் பணத்தைப் பரிமாற்றம் செய்ய பயனாளியின் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, மேலும் பயனாளியைச் சேர்ப்பதற்கு வங்கியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கவும் தேவையில்லை. கணக்குகளுக்கு இடையில் பணத்தை உடனடியாக பரிமாற்றம் செய்வதற்குப் பணம் பெறுபவரின் மொபைல் எண்ணை உள்ளிட்டால் போதும். IMPS, NEFT போன்ற பிற ஆன்லைன் பணப் பரிமாற்ற முறைகளைப் போலல்லாமல், Paytm செயலியில் உள்ள UPI அம்சம் பணம் பெறுபவரின் பல்வேறு விவரங்களை உள்ளிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் நிறைய நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்துகிறது. இதனால் UPI மூலம் பணப் பரிமாற்றத்தை எளிமையாகவும், விரைவாகவும், தொந்தரவு இல்லாமலும் செய்யலாம்.

  மேலும், நீங்கள் மாதாந்திர பில்களைத் தானாகச் செலுத்துவதற்கு UPI ஆட்டோபே வசதியைப் பயன்படுத்தலாம், இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நீங்கள் கண்காணிக்க வேண்டிய மேலும் ஒரு தேவையைக் குறைக்கலாம். இதை விட வேறு ஒரு சிறப்பான வசதி இருக்குமா என்று எங்களுக்குத் தெரியவில்லை!

  3 – சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு

  வேறு சில செயலிகளைப் போலல்லாமல், Paytmயில் ஒவ்வொரு UPI பரிவர்த்தனையின்போதும் ஒரு குறிப்பு ஐடியைப் பெறுவீர்கள். பரிவர்த்தனையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் இந்தக் குறிப்பு ஐடியின் மூலம் Paytmயின் 24*7 வாடிக்கையாளர் சேவையை அணுகி சிக்கல்களுக்குத் தீர்வு காணலாம். மாற்றாக, 0120-4456-456 என்ற எண்ணிலும் Paytmயின் வாடிக்கையாளர் சேவையை நீங்கள் தொடர்புகொண்டு உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். ஏதேனும் மோசடி ஏற்பட்டால் அல்லது பரிவர்த்தனைகள் தவறுதலாக செய்யப்பட்டால் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

  உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மொபைல் எண் இருந்தால் போதும், அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும். Paytm UPI சேவை மூலம் உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் மற்றும் நீங்கள் விரும்பும் சேவைகளை சப்ஸ்கிரைப் செய்யலாம். தொழில்துறையில் Paytm UPI சிறந்த வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது, இது UPI பரிவர்த்தனைகளுக்கு மிகவும் சிறந்தத் தேர்வாக அமைகிறது.  

  கூடுதலாக, உங்கள் KYC தேவையைப் பூர்த்தி செய்யாமலேயே Paytmயில் UPI பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.மேலும், Paytm UPI பரிவர்த்தனைகளை எந்தவிதமான கட்டணங்களும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளலாம்.

  4 – மிகவும் மதிப்பு  வாய்ந்தது

  QR மற்றும் மொபைல் பேமண்ட்களின் முன்னோடியாக Paytm திகழ்கிறது. நீங்கள் Paytm செயலியில் கடைகள்/வியாபாரிகளின் ஃபோன் எண்களை உள்ளிட்டோ அவர்களின் QR குறியீடுகளை ஸ்கேன் செய்தோ அவர்களுக்குப் பணம் செலுத்தலாம். Paytm மூலம், Paytmயின் QR குறியீடுகளை மட்டுமின்றி அனைத்து UPI சேவை வழங்குநர்களின் QR குறியீடுகளையும் ஸ்கேன் செய்யலாம், இது செயலியின் பயன்பாட்டை இன்னும் சிறப்பாக்குகிறது. ஒவ்வொரு UPI பேமெண்ட்டிலும் கேஷ்பேக் மற்றும் பல்வேறு தள்ளுபடி வவுச்சர்களை இந்த செயலி வழங்குகிறது, இது உங்களுக்கு பலனளித்து பலன் பெறும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.

  Paytm ஒரு நாளில் அதிகபட்சமாக INR 1 லட்சம் வரைக்கும் பரிவர்த்தனைகளைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது, எனவே தேவைக்கேற்ப பெரிய அல்லது சிறிய பரிவர்த்தனைகளை நீங்கள் செய்துகொள்ளலாம். வீட்டு உபயோகப் பில்கள், கிரெடிட் கார்டு பில்கள், கடன் EMIகள் போன்றவற்றைச் செலுத்துவதற்கான வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைத் தவிர்ப்பதற்காக, உங்கள் UPI பின்னை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

  UPI பரிவர்த்தனைகள் என்று வரும்போது, பலன்கள் மற்றும் பயனுள்ள அம்சங்களின் மொத்தக் குவியலுடன் கூடிய உயர்தர பாதுகாப்புச் சேவையாக Paytm செயலி உள்ளது. Paytm செயலியில் UPI அம்சத்தைப் பயன்படுத்தி, பணம் பெறுபவரின் மொபைல் எண்ணை உள்ளிட்டு பில்கள், வாடகை, ஷாப்பிங் போன்றவற்றிற்குப் பணம் செலுத்தவும் பணப் பரிமாற்றச் சேவைகளுக்குமான புதிய வழியை அணுகுங்கள். #PaytmKaro உடன் உங்கள் UPI அனுபவத்தை மேம்படுத்துவதற்கான நேரம் இதுவே.

  Brand Connect

  Published by:Selvi M
  First published:

  Tags: Paytm, UPI