• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பேடிஎம் நிறுவனம்.. கண்ணீர் வடித்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர்

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பேடிஎம் நிறுவனம்.. கண்ணீர் வடித்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர்

PayTM

PayTM

பேடிஎம் நிறுவனம் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்த போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அந்நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் கண்ணீர் சிந்தினார்.

  • Share this:
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நிதி சேவை நிறுவனமான பே.டி.எம், ஐபிஓ மூலம் நிதி திரட்ட முடிவு செய்த நிலையில் இன்று அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பேடிஎம் மாறியிருக்கிறது.

பணப் பரிவர்த்தனைகள் அனைத்து டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் டிஜிட்டல் நிதிசேவை அளிக்கும் நிறுவனமாக தொடங்கப்பட்டது பேடிஎம். தொடக்கத்தில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் டிடிஹெச் ரீசார்ஜ் செய்யும் தளமாக இருந்த பேடிஎம் படிப்படியாக வளர்ந்து இன்று சிறியதும், பெரியது என 2 கோடி வணிகர்களால் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய நிதிசேவை நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது.

காய்கறி, மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவதில் தொடங்கி கல்விக் கட்டணம் செலுத்துவது, தியேட்டர் புக்கிங், விமான பயணங்களுக்கான டிக்கெட் வாங்குவது வரை நிதிசேவை, இ-காமர்ஸ் துறைகளில் இன்று கொடி கட்டிப் பறக்கிறது பே.டி.எம் நிறுவனம்.

Also read:  Davemaoite: ஆச்சரியத்தில் அறிவியல் உலகம்.. வைரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட உலகில் இதுவரை பார்த்திராத கனிமம்

இந்நிறுவனத்தில் சீனாவின் புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆண்ட் குரூப் அதிகளவில் முதலீடு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜப்பானின் சாஃப்ட் பேங்க், ரத்தன் டாடா, வாரன் ஃபப்பெட்டின் பெர்க்‌ஷயர் ஹேத்வே போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில் பங்குச்சந்தையில் 18,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட முடிவு செய்த பேடிஎம் நிறுவனம் இதற்காக விண்ணப்பித்திருந்தது. புதிய பங்குகளின் மூலம் மட்டும் 8235 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு ‘கோல் இந்தியா’ நிறுவனம் ஐபிஓ மூலம் சுமார் 15,000 கோடி ரூபாய் நிதி திரட்டியிருந்தது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐபிஓ இது தான். தற்போது பேடிஎம் இதைவிட அதிக தொகையை திரட்ட திட்டமிட்டு களமிறங்கியிருப்பதால் இதுவே இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பேடிஎம் நிறுவனம் பட்டியலிடப்பட்டது.

Also read:  இனி 468 வருஷத்துக்கு அப்புறம் தான் இது நடக்குமாம்.. நவ 19ஆம் தேதி மிஸ் பன்னிடாதீங்க..

ஒரு பங்கின் விலை 2080 முதல் 2150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது ஆனால் பங்குச்சந்தையில் தொடக்கநிலையில் 1705 ரூபாய் என்ற அளவில் பங்குகளில் விலை வர்த்தகமானது. இது 21% வீழ்ச்சி ஆகும். இடையே 1586 ரூபாய் அளவுக்கும் பங்கு விலை வர்த்தகமானது. பேடிஎம் பங்குகளில் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

பங்கு விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

முன்னதாக பேடிஎம் நிறுவனம் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்த போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அந்நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் கண்ணீர் சிந்தினார். பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முன்னதாக இந்திய அணி போட்டிக்கு தயாராகும் முன் எந்தவித மனநிலையில் இருக்குமோ அப்படித்தான் தற்போது எனக்கும் உள்ளது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது பேடிஎம் நிறுவனம் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்திருப்பதன் மூலம் பலரும் மில்லியனர்களாக மாறியிருக்கின்றனர். நிறுவன தலைவர் சேகர் சர்மாவின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரின் மகனான விஜய்சேகர் சர்மா ஒரு பொறியல் பட்டதாரி ஆவார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: