பேடிஎம் வழியாக வட்டி இல்லாமல் கடன் வாங்கும் வசதி இருக்கிறது. அதுப்பற்றி உங்களுக்கு தெரியுமா?
கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். ஆனால் கடன் இல்லாமல் இந்தியாவே இயங்காது அதுதான் நிதர்சனம். முன்பெல்லாம் அவசர தேவை என்றால் வட்டிக்கு வாங்குவார்கள். அதற்கு மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என சொத்தையே விற்றவர்கள் இங்கு ஏராளம். இந்த கந்து வட்டி கொஞ்சம் கொஞ்சமாக மாறி கிரேடிட் கார்டு வந்தது. அதன் பின்பு பேங்கில் இன்ஸ்டண்ட் லோன் வரை மாற்றங்கள் நிகழ்ந்தன. மொத்தத்தில் கடன் வாங்காமல் மனிஷ பிறவி இல்லை என்பது போல் உலகம் மாறிவிட்டது.
பெரும்பாலும் தேவை என்றவுடன் நாம் முதலில் கேட்பது நண்பர்களிடம் தான். ஐஞ்சோ பத்தோ அவசரம் என்றவுடன் அவர்களுக்கு தான் முதல் ஃபோன். நண்பர்களிடம் வாங்கும் கடனுக்கு நாம் வட்டி எல்லாம் கொடுப்பதில்லை. அப்படி தான் இந்த பேடிஎம் வழங்கும் அவசர கடனும். ’போஸ்ட்பெய்ட் மினி’ என்று அழைக்கப்படும் இந்த சேவை, வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவில் கடன்களை வழங்குகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பேடிஎம் நிறுவனம் தித்யா பிர்லா ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து இந்த கடனை வழங்குகிறது. அதேபோல் இதில் வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்ப செலவுகள், ரீச்சார்ஜ் முதல், டிடிஎச் ரீசார்ஜ், சிலிண்டர் புக்கிங், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றையும் செலுத்த முடியும். வாடிக்கையாளர்களுக்குரூ. 60 ஆயிரம் வரை உடனடிக் கடன் வழங்குவது மட்டுமின்று ரூ. 250 முதல் ரூ. 1000 வரையிலான கடன்களையும் பெற்றுக் கொள்ளலாம். இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு
பேடிஎம் ஆபில் இதுப்பற்றி தெரிந்து கொள்ளலாம். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்து, அந்த கடனை பெற நீங்கள் தகுதியானவாரா? என்ற தகவல்கள் அனைத்தையும் ஆப்பின் வழியே வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.