டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பிஸினஸில் 6 ஆண்டுகளுக்கு முன்பு கால்பதித்த பே.டி.எம் நிறுவனம் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையை பெற்றுள்ளது. தற்போது 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள அந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கான கேஷ்பேக் ஆஃபரை 50 கோடி ரூபாய் வரை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 200 மாவட்டங்களில் இந்த கேஷ்பேக் ஆஃபர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு வணிகர்கள் பெருமளவில் பங்களித்திருப்பதாகவும், அவர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக பே.டி.எம் இருப்பதில் மகிழ்ச்சியளிப்பதாகவும் பே.டி.எம் தெரிவித்துள்ளது. சுமார் 2 கோடிக்கும் மேலான வணிகர்கள் பே.டி.எம் பணப்பரிவர்த்தனை பயன்படுத்துவதாகவும், அவர்களுக்காக 50 கோடி ரூபாய் மதிப்பிலான காஷ்பேக் சலுகைகளை ஆண்டு முழுவதும் வழங்கபட உள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தீபாவளிக்கு முன்பாக பே.டி.எம் செயலி மூலம் அதிக பணப்பரிவர்த்தனையை செய்யும் வணிகர்கள், டாப் மெர்ச்ன்டஸ் என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ள பே.டி.எம், அவர்களுக்கு இலவசமாக சவுண்ட் பாக்ஸ் மற்றும் IoT சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.
Also Read:
விலையுயர்ந்த பங்களாவை நஷ்டத்துக்கு விற்பனை செய்த ரோகித் சர்மா..! காரணம் என்ன?
வணிக தளங்கள் மற்றும் கடைகளில் இருக்கும் பே.டி.எம் நிறுவனத்தின் QR Code -ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வாடிக்கையளார்களுக்கும் கேஷ் பேக் ஆஃபர் உள்ளதாக பே.டி.எம் கூறியுள்ளது. ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் இந்த கேஷ்பேக் ஆஃபர் இருக்கும் என கூறியுள்ளது.
இது குறித்து பேசிய பே.டி.எம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, இந்தியா டிஜிட்டல் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத்துறையில் அனைவருக்குமான வளர்ச்சியாக இருப்பதாக தெரிவித்த சர்மா, பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு செல்ல உதவிக்கொண்டிருக்கும் அனைத்து வர்த்தகர்களையும் அங்கீகரிக்கும் சிறு முயற்சி என தெரிவித்துள்ளார். பே.டி.எம்மின் பிஸினஸ் செயலியை பயன்படுத்தும் தகுதிவாய்ந்த வணிகர்களுக்கு 50 விழுக்காடு கேஷ்பேக் சலுகையும் இருப்பதாக விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.
Also Read:
'ஊருக்கு தான் உபதேசம்..' நவ்ஜோத் சிங் சித்து செய்த காரியத்தால் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு!
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தலைவர் அபிஷேக் சிங் பேசும்போது, கடந்த 6 ஆண்டுகளில் டிஜிட்டல் இந்தியா திட்டம் உலக வரைபடத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றிருப்பதாக கூறியுள்ளார். இதில் பே.டி.எம் நிறுவனத்தின் பங்கும் இருப்பதாக கூறிய அவர், பே.டி.எம் நிறுவனம் வழங்கும் கேஷ்பேக் சலுகைகள் நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான வணிகர்கள் மத்தியில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் தொடர்பான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், பணமில்லா பரிவர்த்தனை என்ற இலக்கை அடைவதிலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டுவதற்கு பே.டி.எம்மின் கேஷ்பேக் ஆஃபர்கள் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.