இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பட்டி, தொட்டி வரை சென்றடையக் காரணமாக இருந்தது யூபிஐ தான். இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் உருவாக்கிய யூபிஐயின் வளர்ச்சி கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அசுர வேகத்தில் வளர்ந்து வளருகிறது. சமீபத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தப்போவதில்லை என அறிவித்தார்.
இது கட்டணமில்லாத சேவை என்பதால் கூகுள் பே, போன் பே போன்ற ஆப்-கள் மூலமாக யூபிஐயை பயன்படுத்தி பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் வசதி இருப்பதால் டிஜிட்டல் பரிவர்த்தனை பல மடங்கு வேகம் காணப்படுகிறது. இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.73 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கடந்த மாதத்தை விட சற்று அதிகமாகும்.
இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு மொத்தம் 6.57 பில்லியன் அதாவது 657 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் 628 கோடி பரிவர்த்தனைகளும், ஜூன் மாதம் 10.14 லட்சம் கோடி மதிப்புள்ள 586 கோடி பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
NCPI-யின் மற்ற தரவுத் தொகுப்புகளின் படி, உடனடி பணப்பரிமாற்ற முறையான IMPS மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் ரூ.4.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 46.69 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு முன்னதாக ஜூலை மாதத்தில், மொத்தம் ரூ.4.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 46.08 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read : வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது
டோல் பிளாசாக்களில் தானியங்கி கட்டண முறையான NETC FASTAG மூலமாக ஆகஸ்ட் மாதம் ரூ.4,245 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளும், ஜூலை மாதம் ரூ.4,162 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஜூலை மாதம் 26.5 கோடியாக இருந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, ஆகஸ்ட் மாதத்தில் 27 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆதார் எண்ணைக்கொண்டு வீட்டு வாசலுக்கே வந்து பணம் வழங்கும் அஞ்சலகத்தின் AEPS முறை கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 11 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.30,199 கோடி விநியோகிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் ரூ.27,186 கோடி மதிப்புள்ள 10.56 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை 2019ம் ஆண்டு அக்டோபரில் முதல் முறையாக 100 கோடியை எட்டியது. அதன் பின்னர் 2020 அக்டோபரில் இருமடங்காக அதிகரித்து 200 கோடியைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Payment App, UPI