எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் உள்பட பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் கார்டுகள் மூலமாக மேற்கொண்ட பேமெண்ட் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன என்று சைபர் பாதுகாப்பு குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த கிளவுட்செக் என்ற நிறுவனம், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டது. அப்போது ரஷியாவைச் சேர்ந்த டார்க் வெப் சைபர் ஃபோரம் ஒன்றில் 1.2 மில்லியன் கார்டுகள் குறித்த தரவுகள் இலவச விளம்பரமாக வெளியிடப்பட்டிருப்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோன்று பைடன்கேஷ் இணையதளத்தில் 7.9 மில்லியன் பயனாளர்களின் கார்ட் பேமெண்ட் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பும் இதேபோன்று பயனாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளன என்றாலும், அப்போது ரகசியத்தன்மை வாய்ந்த முக்கியத் தகவல்கள் பாதிக்கப்படவில்லை.
ஆனால், இந்த முறை பயனாளர்களின் எஸ்எஸ்என், கார்டு விவரங்கள் மற்றும் சிவிவி எண் போன்ற முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், எஸ்பிஐ வங்கி, பிசர்வ் சொல்யூஷன்ஸ் எல்எல்சி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி வங்கி அமைப்புகளின் தரவுகள் கசிந்துள்ளன. சுமார், விசா பேமெண்ட் சேவை கொண்ட 5.08 லட்சம் டெபிட் கார்டுகளின் விவரங்கள் மற்றும் மாஸ்டர்கார்டு சேவை கொண்ட 4.14 லட்சம் கார்டுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன’’ என்று தெரிவித்தனர்.
கார்டு உரிமையாளர்களின் இமெயில் முகவரி பிரதானமாக வெளியாகியுள்ளது. அதேபோன்று சாஃட்பேங்க், பேங்க் ஆஃப் சிங்கப்பூர், வேர்ல்டு பேங்க் போன்ற அமைப்புகளின் அலுவலக இமெயில் முகவரிகளும் கூட இந்த தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
சைபர் பாதுகாப்பை பலப்படுத்த எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதையெல்லாம் முறியடிக்கும் வகையில் புதிய உத்திகளுடன் அவர்கள் களமிறங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இணையதளங்களுக்கு மிக அதிகமான பயனாளர்கள் வருகையை (டிராஃபிக்) உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய சைபர் தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்றும் சைபர் பாதுகாப்பு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Read More: PM Kisan : தீபாவளிக்கு முன் உங்கள் அக்கவுண்ட்டில் ரூ.2000 - மத்திய அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்
டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட இன்றைய சூழலில், சைபர் தாக்குதல்களை கடந்து நாம் ஒதுங்கி நின்றுவிட முடியாது. கட்டாயம், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொண்டு தொடர்ந்து டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
Read More: கிரெடிட் கார்டு பில்லை சரியான தேதியில் கட்ட முடியவில்லையா? இனிமேல் பயம் வேண்டாம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.