நாட்டின் மிகப்பெரிய FMCG நிறுவன அந்தஸ்து... அதிவேக வளர்ச்சியில் பதஞ்சலி நிறுவனம்!

இந்த நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் எல்லையை எட்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய FMCG நிறுவன அந்தஸ்து... அதிவேக வளர்ச்சியில் பதஞ்சலி நிறுவனம்!
பதஞ்சலி
  • News18
  • Last Updated: January 27, 2020, 7:03 PM IST
  • Share this:
பதஞ்சலி நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியால் வரும் நிதியாண்டில் நாட்டின் முன்னணி மிகப்பெரும் FMCG நிறுவனமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டின் மிகப்பெரிய FMCG நிறுவனமாக உள்ள யுனிலீவர் நிறுவனத்தைப் பின் தள்ளி பதஞ்சலி குழுமம் முதலிடத்துக்கு அதிவிரைவாக முன்னேறி வருகிறது.

இந்த நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் எல்லையை எட்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ருச்சி நிறுவனத்தையும் பதஞ்சலி கைப்பற்றியுள்ளதால் சமையல் எண்ணெய் சந்தையில் முன்னணி இடத்தைப் பெறும் வாய்ப்பையும் பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ளது.


இதுகுறித்து பாபா ராம்தேவ் கூறுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் நிறுவன வருவாய் 50 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை உயரும். இன்றைய சூழலில் FMCG பிரிவில் நாட்டின் முதல் நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ள ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனத்தை பதஞ்சலி பின்னுக்குத்தள்ளும்” என்றார்.

மேலும் பார்க்க: மிகவும் நலிவடைந்துள்ள இந்தியப் பொருளாதாரம்... நோபல் வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி வேதனை!
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்