Home /News /business /

`வாட்ஸ்ஆப்’-க்கு போட்டியான `கிம்போ’ செயலியை அம்போவென கைவிட்ட பதஞ்சலி!

`வாட்ஸ்ஆப்’-க்கு போட்டியான `கிம்போ’ செயலியை அம்போவென கைவிட்ட பதஞ்சலி!

கிம்போ செயலியின் சோதனை ஓட்டம் தான் இது, மீண்டும் மெருகேற்றப்பட்டுப் பயன்பாட்டிற்கு வரும் என்று பதஞ்சலி தரப்பு கூறியது.

கிம்போ செயலியின் சோதனை ஓட்டம் தான் இது, மீண்டும் மெருகேற்றப்பட்டுப் பயன்பாட்டிற்கு வரும் என்று பதஞ்சலி தரப்பு கூறியது.

கிம்போ செயலியின் சோதனை ஓட்டம் தான் இது, மீண்டும் மெருகேற்றப்பட்டுப் பயன்பாட்டிற்கு வரும் என்று பதஞ்சலி தரப்பு கூறியது.

  • News18
  • Last Updated :
    பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப்-க்கு போட்டியாக `கிம்போ’ என்ற செயலியை மே மாதம் அறிமுகம் செய்தது. அடுத்த சில மணிநேரங்களிலேயே இது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

    வாட்ஸ்ஆப் போன்றே பல முக்கிய அம்சங்கள் இருந்தும், அதிலிருந்த குறைகளால் தோல்வி அடைந்தது. பின்னர் குறைபாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் மேக் இன் இந்தியா செயலியை அறிமுகம் செய்வோம் என பதஞ்சலியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆச்சர்யா பாலகிருஷ்ணா கூறினார்.

    அடுத்த சில நாட்களில் இந்தச் செயலி அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர் ஒருவரால் வேறு ஒரு பெயரில் உருவாக்கப்பட்டது. அதனைப் பெயர் மாற்றம் செய்து பட்டி டிங்கரிங் கூடச் செய்யாமல் முக்கிய அம்சங்களில் பழைய பெயரே இருந்தது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

    இருந்தாலும் இது ஒரு மேக் இன் இந்தியா செயலி, தற்போது அதிலிருந்த குறைகள் நீக்கப்பட்டுள்ளது என்று ஆகஸ்ட் மாதம் மீண்டும் அறிமுகம் செய்தனர். ஆனால் அன்றே கிம்போ செயலியை இன்ஸ்டால் செய்த ஸ்மார்ட்போன்களின் தகவல்களை யார் வேண்டுமானாலும் திருட முடியும் என்று பிரான்ஸைச் சேர்ந்த பிரபல ஹேக்கரான எலியாட் அல்டர்சன் செய்து காட்டினார்.

    உடனே அந்தச் செயலியை உருவாக்கிய அதிதி கமல் என்பவர் பதஞ்சலியின் தொழில்நுட்பப் பிரிவிலிருந்து வெளியேறினார். கிம்போ செயலியின் சோதனை ஓட்டம் தான் இது, மீண்டும் மெருகேற்றப்பட்டுப் பயன்பாட்டுக்கு வரும் என்று பதஞ்சலி தரப்பு கூறியது.

    அதிதி கமல் கிம்போ செயலியை அம்போவென விட்டுச்செல்ல குர்காமைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பை பதஞ்சலி ஒப்படைத்தது. அதிலும் எந்த முன்னேற்றம் இல்லாத நிலையில், கூடுதலாக முதலீடு ஏதும் செய்ய முடியாது என்று பதஞ்சலி கிம்போ செயலியைக் கைவிட்டுள்ளது.

    மேலும் படிக்க: இந்தாண்டின் மிக குறைந்த விலையில் பெட்ரோல், டீசல்
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Kimbho app, Patanjali, WhatsApp

    அடுத்த செய்தி