தொலைதூர ரயில்களில் சாதாரண டிக்கெட்டை வைத்துக் கொண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணித்தால் என்ன ஆகும்? நிச்சயமாக டிக்கெட் பரிசோதகர் வந்து நமக்கு அபராதம் விதிப்பார். ஆனால், இனி வரக் கூடிய காலங்களில் அபராதம் இல்லாமலேயே, சாதாரண டிக்கெட்டில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிகளை பயணிக்க அனுமதிக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே துறை செயல்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய குளிர் காலத்தில் பயணிகள் பெரும்பாலும் படுக்கை வசதியுள்ள பெட்டிகளுக்கு பதிலாக ஏசி வசதி கொண்ட பெட்டிகளையே அதிகம் தேர்வு செய்கின்றனராம். முழுமையாக அடைக்கப்பட்ட ஏசி பெட்டிகளில் குளிர்நிலை இயல்பான அளவில் இருப்பதும், வெளிப்புறத்தில் நிலவும் கடுங்குளிர் உள்ளே ஊடுருவாது என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். இதனால் படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் பல இடங்கள் காலியாகவே உள்ளன.
அதே சமயம், பயணிகள் ஏசி பெட்டிகளை அதிகம் தேர்வு செய்வதால் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பெரும்பாலும் காலியாக இருக்கின்றனவாம். இருப்பினும், பொது பெட்டியில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், சாதாரண டிக்கெட் வைத்திருப்பவர்களை படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க அனுமதிப்பது குறித்து இந்திய ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது. படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் மொத்தமுள்ள இடங்களில் 80 சதவீதத்திற்கு குறைவாக நிரம்பும் ரயில்களின் விவரங்களை திரட்டுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
பொதுப்பெட்டிகளாக மாறும் படுக்கை வசதியுள்ள பெட்டிகள்?
ரயில்களில் டிக்கெட் நிரம்பாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை பொதுப்பெட்டிகளாக மாற்றுவது குறித்து ரயில்வே அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இந்தப் பெட்டிகளில் ஏற்கனவே உள்ள நடுபடுக்கையை (middle birth) பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிகிறது.
ஏற்கனவே செயல்படுத்திய நடவடிக்கை தான்
தொலைதூர ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை பொதுப்பெட்டிகளாக ரயில்வே துறை மாற்றுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள படுக்கை வசதியுள்ள பெட்டிகளை சாதாரண பெட்டிகளாக பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதன் முதலில் இந்தத் திட்டத்தை மத்திய கிழக்கு மண்டல ரயில்வே செயல்படுத்தியது. அதன்படி எண்ணற்ற பயணிகள் பலன் அடைந்தனர். மீண்டும் அதே பாணியில் அமலுக்கு வர இருக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் சாதாரண டிக்கெட் கொண்ட ரயில் பயணிகள் இனி படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் பயணிக்கலாம். அதுவும் அபராதம் இல்லாமலேயே..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train