இந்த வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? பாஸ்புக் மற்றும் செக்புக் ஏப்ரல்-1 முதல் செல்லாது

இந்த வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? பாஸ்புக் மற்றும் செக்புக் ஏப்ரல்-1  முதல் செல்லாது

இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாகவும் புதுப்பிப்புகளைப் பெறலாம்

  • Share this:
    மத்திய அரசின் வங்கி இணைப்பு திட்டத்தின் கீழ் பழைய வங்கியில் கணக்குடையவர்கள் முழுமையாக புதிய வங்கிக்கு மாறுகிறார்கள். எனவே பழைய வங்கிகளின் பாஸ்புக், காசோலை மற்றும் ஐ.எஃப்.எஸ். சி கோடு எதுவும்  ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது.

    பொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பின் படி விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை பாங்க் ஆப் பரோடாவிலும், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியில் மத்திய அரசு இணைத்துள்ளது. இதன் மூலம் 8 பொதுத்துறை வங்கிகள் 3 வங்கிகளாக மாறின. விஜயா வங்கி, தேனா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அவர்களது காசோலை மற்றும் பாஸ்புக் ஆகியவை ஏப்ரல் 1-முதல் செல்லாது.

    தற்போதுள்ள காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாமல் போன பிறகு, வாடிக்கையாளர்களின் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி, எம்.ஐ.சி.ஆர் குறியீடு, கிளை முகவரி , காசோலை புத்தகம், பாஸ் புக் ஆகியவை மாற்றம் செய்யப்படும்.

    இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாகவும் புதுப்பிப்புகளைப் பெறலாம். தங்களுடைய மொபைல் எண், முகவரி, நாமினி விவரங்கள் ஆகியவற்றை அவர்கள் புதுப்பிக்க வேண்டும்.

    மேலும் புதிய பாஸ்புக் மற்றும் கணக்கு விவரங்களை பெற்ற உடன் பல்வேறு முதலீடுகள் மற்றும் மியூசுவல் ஃபண்டுகள், வர்த்தக கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள், பி.எஃப் கணக்கு உள்ளிட்டவற்றில் புதுப்பிக்க தவற வேண்டாம்.
    Published by:Vijay R
    First published: