சிறிய பொருளாதார குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லை - கம்பெனி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

சிறிய பொருளாதார குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லை - கம்பெனி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • News18
  • Last Updated: September 22, 2020, 6:18 PM IST
  • Share this:
நிறுவனங்களில் நடைபெறும் பல்வேறு பொருளாதார குற்றங்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் கம்பெனி சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.

செப்டம்பர் 19ம் தேதி அன்று மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதாவில், பல்வேறு பொருளாதார குற்றங்கள் மீதான கிரிமினல் நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனங்கள் தொடங்குவதற்கான உகந்த சூழலை ஏற்படுத்துவதற்கும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


அதன்படி விதிமீறல்களுக்கான அபராதம் குறைக்கப்பட்டுள்ளதோடு, நிறுவன உரிமைப் பிரச்னைகள் குறித்து தீர்வு காண்பதற்கான காலக்கெடுவும் குறைக்கப்பட்டுள்ளது.Also read... நவம்பர் 1 முதல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்துக்கு பல்வேறு கிளைகளும் அமைக்கப்படுகின்றன. எனினும் பெரும் அளவிலான பண மோசடி, கையாடல் உள்ளிட்ட முக்கிய குற்றங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு, இந்த மசோதாவில் எவ்வித விலக்கும் அளிக்கப்படவில்லை.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading