Home /News /business /

PAN : உங்கள் பான்கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

PAN : உங்கள் பான்கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பான்  கார்டு

பான் கார்டு

PAN no : பான் கார்டு தொடர்பான புகார்களை தெரிவிக்க எலெக்ட்ரானிக் போர்டல் ஒன்றை வருமான வரித்துறை நடத்தி வருகிறது.

    உங்களிடம் பான் கார்டு இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசடியாளர்கள் உங்கள் பான் கார்டை தவறாகப் பயன்படுத்தக் கூடும். இப்படி பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில், நடிகர் ராஜ்குமார் ராவ் அண்மையில் இணைந்திருக்கிறார். அவரது பான் கார்டை பயன்படுத்தி, அவர் பெயரில் யாரோ சிலர் கடன் பெற்றுள்ளனர். இந்த மோசடி காரணமாக தன்னுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இவர், இந்த விவகாரத்தில் சிபில் (CIBIL) அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து, டிவிட்டரில் நடிகர் ராஜ்குமார் ராவ் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பான் கார்டு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனது பெயரில் ரூ.2,500 தொகைக்கான சிறு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால், என்னுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது.சிபிஐ அமைப்பு அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

    ஏப்ரல் மாத வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் ? முழு விவரம் இதோ..

    பான் கார்டு - சில குறிப்புகள்

    பான் கார்டு என்பது 10 இலக்க ஆல்பா நியூமெரிக் நம்பர் கொண்டதாகும். இந்த கார்டை வருமான வரித்துறை விநியோகம் செய்கிறது. லேமினேஷன் செய்யப்பட்ட அட்டை வடிவில் இது கிடைக்கிறது. பான் கார்டு கோரி விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படுகிறது. ஒரு தனிநபர் மேற்கொள்ளும் அனைத்து விதமான பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும் பொருட்டு இந்த பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வரி செலுத்துதல் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட், வருமானம், சொத்து, பரிசு போன்ற அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு கீழ் வரும்.

    உங்கள் பான் கார்டு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?

    பான் கார்டு தொடர்பான புகார்களை தெரிவிக்க எலெக்ட்ரானிக் போர்டல் ஒன்றை வருமான வரித்துறை நடத்தி வருகிறது. இந்த தளத்தை பயன்படுத்தி உங்கள் புகார்களை நீங்கள் UTITSL அல்லது NSDL அமைப்புகளிடம் முன்வைக்கலாம். இந்த இணையதளம் வாயிலாக டூப்ளிகேட் பான் கார்டை நீங்கள் சரண்டர் செய்யலாம்.

    தங்கம் அல்லது நிலம் வாங்கும் போது யாரெல்லாம் வரி கட்ட வேண்டும் தெரியுமா?

    புகார் அளிக்கும் நடைமுறைகள்

    • வருமான வரித் துறையின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி நீங்கள் https://incometax.intelenetglobal.com/pan/pan.asp என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

    • இதில், சப்மிட் பட்டன் மீது கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் தொடர் விவரங்களை பதிவு செய்யவும். குறிப்பாக, உங்கள் புகாரின் தன்மை என்ன, ரிசிப்ட் நம்பர் போன்ற விவரங்களை குறிப்பிடவும்.

    • புகாரை சமர்ப்பிக்க சப்மிட் பட்டன் மீது கிளிக் செய்யவும்.


    • மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால், முன், பின் தெரியாத நபர்களிடம் உங்கள் பான் கார்டு விவரங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள கூடாது. குறிப்பாக, உங்கள் ஃபோனுக்கு வரும் ஓடிபி, உங்கள் கேஒய்சி விவரங்கள் போன்றவற்றை நீங்கள் பகிரக் கூடாது.



      உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Aadhar, Online, Pan card

    அடுத்த செய்தி