Home /News /business /

PAN : ரூ. 10,000 அபராதத்தில் இருந்து தப்பிக்க பான் கார்டு வைத்திருப்பவர்கள் இதை உடனே செய்யுங்கள்!

PAN : ரூ. 10,000 அபராதத்தில் இருந்து தப்பிக்க பான் கார்டு வைத்திருப்பவர்கள் இதை உடனே செய்யுங்கள்!

பான் கார்டு

பான் கார்டு

PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.

    வங்கிக்கணக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், அடையாளச் சான்று என்று தனிநபர் சார்ந்த எல்லா விஷயங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு அப்டேட்டுகள் வருகின்றன. வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யவும், ஒரு தனிநபரின் அடையாளச் சான்றாகவும், மேலும் பல விதங்களில் பரிவர்த்தனைகளை உறுதிபடுத்தவும் பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பான் கார்டு தொலைந்து போனால் என்ன செய்வது, பான் கார்டு செயலிழந்து போனால் என்ன ஆகும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. அதன் படி, ஒவ்வொரு செயல்முறைக்கும் குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. டெட்லைன் தவறும் ஒவ்வொரு முறையும் நீங்கள் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

    PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மார்ச் 31, 2022 வரை அவகாசம் கொடுக்கபபட்டுள்ளது. அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2022 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்பட்டுவிடும். இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும்.

    இதையும் படிங்க.. புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கிறீர்களா? ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்!

    வருமான வரித்துறை சட்டம் 139AA பிரிவின் படி, பான் கார்டு வைத்திருக்கும் மற்றும் ஆதார் பெறக்கூடிய தகுதி உள்ள ஒவ்வொரு நபரும், தங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணை லிங்க் செய்ய வேண்டும் என்று ஜூலை 1, 2017 அன்று அறிவித்தது.

    பான் எண் செயலிழந்து போனால், நீங்கள் பான் எண்ணை சமர்ப்பிக்கவில்லை என்று கருதி, அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கருதும். "நிரந்தர கணக்கு எண் செயலிழந்துவிட்ட ஒரு நபர், சட்டத்தின் கீழ் தனது பான் எண்ணை வழங்கவோ, தெரிவிக்கவோ அல்லது சமர்ப்பிக்கவோ தேவை ஏற்படும் போது, அவர் தனது பான் எண்ணை வழங்கவில்லை என்றே கருதப்படும். விளைவுகளின் படி, சம்மந்தப்பட்ட நபரின் மீது வழக்கு தொடுக்கப்படலாம். மேலும், தேவைப்படும் இடங்களில் பான் எண்ணை வழங்காமல் இருப்பதால் சட்டப்படி ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அவரே பொறுப்பாவார்,” என்று CBDT அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க.. PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்...

    வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை. வருமான வரித்துறை சட்டம் 272B பிரிவின் படி, பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும், செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை என்னும் போது, நீங்கள் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Aadhar, Pan card

    அடுத்த செய்தி