Home /News /business /

ரூ. 10,000 அபராதத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி PAN கார்டுடன் ஆதாரை இணைப்பது!

ரூ. 10,000 அபராதத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி PAN கார்டுடன் ஆதாரை இணைப்பது!

பான் - ஆதார்

பான் - ஆதார்

PAN card aadhaar card update: பான் எண்ணுடன், ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆண்டில் நீங்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதியை, மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) பலமுறை நீட்டித்துள்ளது என்ற போதிலும், கட்டாயமாக இதை செய்தாக வேண்டும் என்பதில் அந்த அமைப்பு உறுதியாக இருக்கிறது.

    இறுதி கெடு தேதி முடிவதற்குள்ளாக பான் எண்ணுடன் ஆதார் எண்-ஐ நீங்கள் இணைக்காவிட்டால், உங்கள் பான் அட்டை செல்லாததாக மாறிவிடும் என்பதோடு மட்டுமல்லாமல், கடும் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

    வருமானவரிச் சட்டம் 1961-இல் 234ஹெச் என்ற புதிய விதியை மத்திய அரசு சேர்த்துள்ளது. உரிய காலக்கெடுவுக்குள் பான் - ஆதார் இணைப்பு செய்யாத தனிநபர்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்க இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது.

    இதையும் படிங்க.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அந்த 2 அறிவிப்புகள்.. முழு விவரம்!

    அதாவது, காலக்கெடு முடிந்த பிறகு பான் ஆதார் இணைப்பு நடவடிக்கையை நீங்கள் மேற்கொண்டால் அதற்கான அபராத தொகையை அரசு விதிக்க முடியும் என்று சிபிடிடி அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதனால்தான், 2022 மார்ச் 31ஆம் தேதிக்கு உள்ளாக இந்த இணைப்பு நடவடிக்கையை நீங்கள் செய்வது மிக அவசியம் என கருதப்படுகிறது. பான் - ஆதார் இணைப்பு நடைபெறாவிட்டால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.

    பான் - ஆதார் இணைப்பு நடவடிக்கையை ஆன்லைனில் செய்வது எப்படி?

    1. வருமான வரி துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். (www.incometax.gov.in)

    2. ஹோம் பக்கத்தில் ஸ்க்ரோல் டவுன் செய்து அவர் சர்வீஸஸ் என்ற தலைப்பை டேப் செய்யவும்.

    3. கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் உங்கள் பெயர், பான் எண், ஆதார் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடவும்.

    இதையும் படிங்க.. PNB : வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் இத்தனை அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி !

    4. I agree to validate aadhaar details என்ற மெனுவை கிளிக் செய்து, continue கொடுக்கவும்.

    5. ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு வரும். அதனை உள்ளீடு செய்து, வேலிடேட் என்பதை கிளிக் செய்யவும்.

    அப்டேட் செய்வதற்கான இரண்டாவது வழிமுறை

    * வருமானவரித் துறையின் இ-பைலிங் இணையதளத்திற்கு செல்லவும்.
    * இதுவரையிலும் நீங்கள் பதிவு செய்திருக்காவிட்டால் அதைச் செய்யவும். பதிவு செய்து இருந்தால் உங்கள் பான் அட்டை எண் கொண்டு உள்ளே நுழையவும்.
    * யூசர் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்யவும்.
    * இங்கு தோன்றும் புதிய விண்டோவில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான மெனுவை கிளிக் செய்யவும். அந்த மெனு தோன்றாவிட்டால் ப்ரோபைல் செட்டிங்ஸ் சென்று லிங்க் ஆதார் என்பதை தேர்வு செய்யவும்.
    * புதிய பக்கத்தில் உங்கள் ஆதார் அட்டை விவரங்களை சரிபார்க்கவும்.
    * விவரங்கள் சரியாக அமைந்தால் லிங்க் என்பதை கிளிக் செய்யவும்.
    * உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்-ஐ வெற்றிகரமாக இணைத்து விட்டீர்கள் என்ற செய்தி பாப் அப் ஸ்கிரீனில் தோன்றும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Aadhaar card, Pan card

    அடுத்த செய்தி