Home /News /business /

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்களுக்கு என்ன நடக்கும்?முழு விபரம்!

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்களுக்கு என்ன நடக்கும்?முழு விபரம்!

பான் - ஆதார்

பான் - ஆதார்

ஆதார் மற்றும் பான் எண்ணை முடிந்த விரைவில் இணைப்பதே உங்களின் முதல் வேலை

  உங்கள் பெர்மனெண்ட் அக்கவுண்ட் நம்பரை (Permanent Account Number), அதாவது பான் (PAN) நம்பரை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதன் பொருள் உங்கள் பான் செயலிழந்து போகலாம் மற்றும் அதை புதுப்பிக்க நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

  இருப்பினும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையிலான அபராதத்தை செலுத்தி, உங்கள் ஆதார்-பான் எண்ணை இணைக்கும் பட்சத்தில், வங்கியில் புதிய அக்கவுண்ட்டை திறப்பது, அசையா சொத்துக்களை வாங்குவது, உங்கள் அடையாளத்தை நிரூபிப்பது மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது போன்ற சேவைகளை நீங்கள் திரும்பவும் பெற முடியும்.

  state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா? இத்தனை நாள் தெரியாம போச்சே!

  சென்ட்ரல் போர்ட் ஆப் டேக்க்ஸ் (Central Board of Direct Taxes - CBDT) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கத் தவறினால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறுகிறது. பிரிவு 139ஏஏ இன் துணைப்பிரிவு (2) இன் விதிகளின்படி, பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் முறையின் கீழ் ஒவ்வொருவரின் ஆதார் எண்ணும் பான் எண்ணும், குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் இணைக்கப்பட வேண்டும்,

  அவ்வாறு செய்ய தவறினால், கூறப்பட்ட துணைப்பிரிவு, கூறப்பட்ட துணைப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலோ அல்லது அதற்கு பின்னரோ ஆதார் - பான் இணைப்பை செய்யும் பட்சத்தில் ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  FIXED DEPOSIT : எஸ்பிஐ மற்றும் போஸ்ட் ஆபீஸில் கிடைக்கும் சலுகைகள் இதுதான்!

  பான் - ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?

  ஆம் என்றால், உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை முடிந்த விரைவில் இணைப்பதே உங்களின் முதல் வேலையாக இருக்க வேண்டும். இதை செய்யாத பட்சத்தில், ஒருவரின் பான் நம்பர் செயலிழந்து போகும். ஆக, செல்லுபடியாகும் ஒரு பான் நம்பர் இல்லாதவர்கள் - வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் போகும், நிலுவையில் உள்ள வருமானம் மற்றும் பணத்தைத் திரும்ப பெற முடியாமல் போகும் மற்றும் அதிக விகிதத்தில் வரி விலக்குகளை பெறுவது போன்ற பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

  மேலும், அனைத்து வகையான பணப் பரிவர்த்தனைகளுக்கும் பான் ஒரு முக்கிய கே.ஒய்.சி (KYC) அளவுகோலாக இருப்பதால், வங்கிகள், நிதி சார்ந்த இணையதளங்கள் உட்பட பல்வேறு இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் காத்திருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். எனவே, இப்போது தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது இந்த ஆண்டு ஜூன் 30 க்குள் (ரூ.1000 என்கிற அபராதத்தில் இருந்து) குறைந்தபட்சம் ரூ.500 சேமிக்க, உங்களின் பான் - ஆதாரை இணைக்கவும்.

  ஆன்லைன் வழியாக பான் - ஆதாரை இணைப்பது எப்படி?

  * அதிகாரப்பூர்வ வருமான வரி இணையதளத்திற்குள் - www.incometax.gov.in - செல்லவும்.

  * கம்ப்யூட்டர் ஸ்க்ரீனின் இடது பக்கத்தில் உள்ள 'குவிக் லிங்க்ஸ்' ('Quick Links) பிரிவில் 'லிங்க் ஆதார்' (Link Aadhaar) விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

  *தற்போது ஒரு புதிய விண்டோ தோன்றும். அதை பான் எண், ஆதார் டேட்டா, பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பவும்.

  * கொடுத்த தகவலைச் சரிபார்த்த பிறகு, ஐ அக்செட்ப் டூ வேலிடேட் மை ஆதார் டீடெயில்ஸ் (I accept to validate my Aadhaar details) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, 'கன்ட்டினியூ' ('Continue') என்கிற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  * இப்போது பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒடிபி (OTP) அனுப்பி வைக்கப்படும். தேவையான தகவல்களை உள்ளிட்டு வேலிடேட் (Validate) என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் அபராதம் செலுத்திய பிறகு, உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Aadhar, Pan card

  அடுத்த செய்தி