Home /News /business /

பான் - ஆதார் இணைக்கவில்லையா? அப்போ கட்டாயம் இந்த வழிமுறையை தெரிஞ்சிக்கோங்க...

பான் - ஆதார் இணைக்கவில்லையா? அப்போ கட்டாயம் இந்த வழிமுறையை தெரிஞ்சிக்கோங்க...

பான் - ஆதார்

பான் - ஆதார்

Pan Aadhaar Card | அனைத்து வகையான பண பரிவர்த்தனைகளுக்கும் மிகவும் முக்கியமான கேஒய்சி (KYC) அளவுகோல்களில் ஒன்று

    பான் மற்றும் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி, ஏற்கனவே முடிந்து விட்டது. பல மாதங்களாக நீடிக்கப்பட்டு வந்த கெடு நாள் முடிந்தும் கூட பான் - ஆதார் இணைப்பை செய்யாதவர்கள், சில விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடனே பான் நண்பர் செயல்படாது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். இதை மத்திய நேரடி வரிகள் வாரியமே (Central Board of Direct Taxes - CBDT) அதன் சமீபத்திய சுற்றறிக்கையில் உறுதி செய்துளளது.

    அதே அறிக்கையில், ஆதார் மற்றும் பான் எண்களை இணைக்காதவர்களுக்கு அடுத்த ஆண்டு வரை அதை செய்வதற்கான அவகாசம் கிடைக்கும், ஆனால் அதை செய்ய ரூ.1,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது. சிபிடிடி, பான் - ஆதாரை இணைக்கும் காலக்கெடுவை மார்ச் 31, 2023 வரை நீட்டித்துள்ளது, ஆனால் முன்னரே குறிப்பிட்டபடி, அதை இன்னும் செய்யாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

    வெளியான அறிக்கையின்படி, ஜூன் 30, 2022 க்குள் பான் - ஆதாரை இணைக்கத்தவர்கள் அதை செய்ய ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும். அந்த தேதிக்குள்ளும் பான் - ஆதார் நம்பர்களை இணைக்க தவறினால், அடுத்த காலக்கெடு வரும் வரை ரூ.1,000 அபராதம் செலுத்தி பான் - ஆதாரை இணைக்கலாம்.

    ஒருவேளை கடைசி கெடு நாளாக அறிவிக்கப்பட்ட தேதிக்குள், அதாவது மார்ச் 31, 2023 க்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அதற்கு பின் எந்த அபராதமும் இருக்காது; குறிப்பிட்ட நபர்களின் பான் எண் செயலிழந்து போகும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது

    ரூ.500 அபராதம் செலுத்தி இப்போதே பாண்-ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்?

    இனி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம்! தெரியுமா?


    செயல் இழந்து போன பான் கார்டை நீங்கள் வைத்து இருந்தால், உங்களால் வரிக் கணக்கை (tax return) தாக்கல் செய்ய முடியாமல் போகும், மேலும் நிலுவையில் உள்ள ரிட்டர்ன்கள் மற்றும் ரீஃபண்ட்களையும் (returns and refunds) செயல்படுத்த முடியாது. உடன் அதிக விகிதத்திலான வரி விலக்குகளும் ஆளாவீர்கள்.

    மேலும், அனைத்து வகையான பண பரிவர்த்தனைகளுக்கும் மிகவும் முக்கியமான கேஒய்சி (KYC) அளவுகோல்களில் ஒன்று - பான் என்பதால், அது செயல் இழந்து போகும் பட்சத்தில், வங்கிகள் மற்றும் பிற பைனான்ஸ் தொடர்புடைய இணையதளங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் வரி செலுத்துவோர்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

    எனவே தான் பான் - ஆதார் இணைப்பது மிகவும் முக்கியமான ஒரு பணியாக கருதப்படுகிறது. ஒருவேளை இன்னமும் நீங்கள் உங்களின் பான் - ஆதாரை இணைக்கவில்லை என்றால் ரூ.500 அபராதம் செலுத்தி உடனே அந்த வேலையை முடிக்கவும். ஜூன் 30 ஆம் தேதிக்குள் இதை செய்து முடித்தால் ரூ.1000 என்கிற அபாரதத்தில் இருந்து தப்பித்து குறைந்தது ரூ.500 ஐ சேமிக்கலாம்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Aadhaar card, Pan card

    அடுத்த செய்தி