Home /News /business /

பான் - ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா? இந்த சேவைகளை இனி பயன்படுத்த முடியாது!

பான் - ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா? இந்த சேவைகளை இனி பயன்படுத்த முடியாது!

ஆதார் - பான்

ஆதார் - பான்

பான் - ஆதார் நம்பர்களை இணைக்காததற்கு எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் தெரியுமா?

    பல ஆண்டுகளாக நீடிக்கப்பட்டு கொண்டே வந்த பான் - ஆதார் இணைப்பிற்கான "அபராதம் இல்லாத" காலக்கெடு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஒருவேளை தற்போது வரை நீங்கள் உங்கள் பான் நம்பரை ஆதார் நம்பருடன் இணைக்கவில்லையென்றால், கவலை வேண்டாம் - மீண்டும் அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை அதை செய்யாத காரணத்திற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

    அபராதத்துடன் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடு - 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஆகும். இந்த தேதிக்குள்ளும் நீங்கள் பான் - ஆதார் இணைப்பை செய்யவில்லை என்றால் உங்கள் பான் கார்டு செயலிழந்து போகும். ஒருவேளை உங்களின் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (PAN) செயலிழந்தால், சில முக்கிய அரசு சேவைகளை நீங்கள் பெற முடியாது.

    Digital banking சேவை என்றால் என்ன? அது செயல்படும் விதம் குறித்த விவரம்!

    மார்ச் 2023 க்குள் பான் - ஆதார் நம்பர்கள் இணைக்கப்படாவிட்டால் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கைகள் என்னென்ன?

    கடந்த மார்ச் 30 ஆம் தேதியன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையானது, “மார்ச் 31, 2023 க்குப் பிறகு, வரி செலுத்துவோரின் பான் நம்பர், தேவைக்கேற்ப தங்கள் ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்ட தவறினால், அது செயல்படாது மற்றும் சட்டத்தின் கீழ் (வருமான வரிச் சட்டம், 1961) அனைத்து விளைவுகளும் ஏற்படும்" என்று கூறுகிறது.

    இதன் ஒரு பகுதியாக, சிபிடிடி (CBDT) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில் “வருமான வரி விதிகளின், விதி 114ஏஏஏ-வின் படி, ஒரு நபரின் பான் கார்டு செயலிழந்துவிட்டால், அவர் தனது பான் நம்பரை வழங்கவோ, தெரிவிக்கவோ அல்லது மேற்கோள் காட்டவோ முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    pmkisan status : ரூ. 2000 எப்போது கிடைக்கும்? வெளியானது முக்கிய அப்டேட்!

    ஒருவர் தன் பான் நம்பரை ஆதாருடன் இணைக்கத் தவறினால் என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும்?

    - செயலிழந்த பான் நம்பரை பயன்படுத்தி ஒருவரால் தன் வருமானத்தை தாக்கல் செய்ய முடியாது

    - நிலுவையில் உள்ள வருமானங்களை கோர முடியாது

    - செயலிழந்த பான் நம்பரை கொண்டு நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெறவும் முடியாது

    - உங்கள் பான் நம்பர் செயலிழந்தவுடன் டிபெக்டிவ் ரிட்டர்ன்ஸ் (defective returns) தொடர்பான நிலுவையில் உள்ள நடவடிக்கைகளையும் முடிக்க முடியாது

    - பான் நம்பர் செயலிழக்கும் பட்சத்தில், அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.

    இதுவரை பான் - ஆதார் நம்பர்களை இணைக்காததற்கு எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும்?

    சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டேக்ஸஸ் (Central Board of Direct Taxes - CBDT), கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை ஆதார் மற்றும் பான் எண்களை இணைக்காதவர்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் அதை செய்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும், குறிப்பிட்ட 3 மாதங்களுக்கு பிறகு பான் - ஆதாரை இணைத்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இருப்பினும், அதுவரை ஆதாருடன் இணைக்கப்படாவிட்டாலும் கூட ஒருவரின் பான் நம்பர் செயல்பாட்டில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்ட அபாரதங்கள் மற்றும் அதற்கான காலக்கெடுகள் முடிந்த பிறகு, மார்ச் 31, 2023 ஆம் தேதி வந்த பிறகும் கூட ஒருவர் தன் பான் - ஆதார் எண்களை இணைக்கவில்லை என்றால் தான், அவரது பான் கார்டு செயலிழந்து போகும் என்பதை நினைவில் கொள்ளவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Aadhar, Pan card

    அடுத்த செய்தி