டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு என்ன தெரியுமா?
டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு என்ன தெரியுமா?
மாதிரிப்படம்
இன்றைய தேதியில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணய மதிப்பு ரூ. 79.84 என்று உள்ள நிலையில் ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் பரிமாற்ற மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு டாலர் என்பது ரூ.230 பாகிஸ்தான் பணம்.
இன்றைய தேதியில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணய மதிப்பு ரூ. 79.84 என்று உள்ள நிலையில் ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் பரிமாற்ற மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு டாலர் என்பது ரூ.230 பாகிஸ்தான் பணம்.
இன்று பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக வெகுவாக குறைந்து சாதனை அளவுக்கு குறைவான மதிப்பு பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி அளித்த தரவுகளின் படி அன்னியச் செலாவணி சந்தையில் ரூ.230 கொடுத்தால் ஒரு டாலர் கொடுப்பார்கள், அதாவது டாலர் ஒன்றிற்கான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு ரூ.228.37லிருந்து மேலும் சரிந்து 230 ஆக குறைந்துள்ளது.
கடந்த வார வர்த்தகத்தில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சுமார் 8% சரிவு கண்டுள்ளது. பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. பணவீக்க விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததை விட அதிகம் என்பதால் ரூபாய் மதிப்பு பலத்த சரிவு கண்டுள்ளது.
ஆனால் கவலையில்லை என்கிறது ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் அடுத்த 12 மாதங்களுக்கான டாலர்கள் கையிருப்புக்கு எந்த வித குந்தகமும் ஏற்படாது என்கிறது.
சர்வதேச நிதியத்தின் திட்டம் ஒன்று தாமதமடைவதால் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவு கண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரூபாய் மதிப்பு இன்னும் குறையட்டும் என்று ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஏற்றுமதியை ஒத்திப் போட்டு வரும் வேளையில் இறக்குமதியாளர்களுக்கான டாலர் டிமாண்ட் அங்கு அதிகரித்து வருகிறது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.