ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக இந்தியாவிலிருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி இல்லை: பாகிஸ்தான் அமைச்சரவை நிராகரிப்பு

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக இந்தியாவிலிருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி இல்லை: பாகிஸ்தான் அமைச்சரவை நிராகரிப்பு

இம்ரான் கான்

இஸ்லாமாபாத்:இந்தியாவில் இருந்து, பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதி செய்ய, பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி முன்வைத்த பரிந்துரையை, அந்நாட்டு அமைச்சரவை நிராகரித்தது.

  • Share this:
இஸ்லாமாபாத்:இந்தியாவில் இருந்து, பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதி செய்ய, பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி முன்வைத்த பரிந்துரையை, அந்நாட்டு அமைச்சரவை நிராகரித்தது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இம்ரான் கான் அமைச்சரவை இந்த இறக்கு மதியை நிராகரித்தது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது. இரு நாட்டுக்கு இடையிலான வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த, பாக்., பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி கூட்டத்துக்கு பின், இந்தியாவில் இருந்து, பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடை, விலக்கிக் கொள்ளப்படுவதாக, பாக்., நிதி அமைச்சர் ஹமத் அசார் அறிவித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகே, நடைமுறைக்கு வருவது வழக்கம்.அதன்படி, பாக்., பிரதமர் இம்ரான் கான் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.இதில், ''ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெறும் வரை, அவர்களுடனான உறவு சுமுகமாக தொடராது. எனவே, இந்தியாவுடன் வர்த்தக உறவை தொடர வாய்ப்பில்லை,'' என, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்தார்.

உலகிலேயே பருத்தி உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய நாடு, சர்க்கரையில் 2வது பெரிய நாடாகும்.

பொருளாதார ஒத்துழைப்புக் கமிட்டியின் ;பரிந்துரைகளை அமைச்சரவை அனுமதிக்க வேண்டும் என்பது அங்கு கட்டாயம், இதில்தான் இம்ரான் கான் இந்தியாவுடன் சுமுகமான உறவு சாத்தியமில்லை, அதாவது ஜம்மு காஷ்மீர் உத்தரவை திரும்பப் பெறும் வரை சாத்தியமில்லை என்று இம்ரான் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கூட்டப்பட்ட முதல் அமைச்சரவைக் கூட்டமாகும் இது.

கடந்த 2020 மே மாதத்தில்தான் மருந்துகள், முக்கிய மூலப்பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள பாகிஸ்தான் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில்தான் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது பாகிஸ்தானின் கோபாவேசத்தை கிளறியது. இந்தியாவுடனான ராஜாங்க உறவுகளைத் தணித்துக் கொண்டதோடு இஸ்லாமாபாதிலிருந்து இந்திய தூதரை வெளியேற்றியது.

இந்தியாவுடன் அனைத்து வான்வழி, தரைவழி தொடர்புகளை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்..
Published by:Muthukumar
First published: