தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் : அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் : அமைச்சர் காமராஜ்
நெல் அறுவடை
  • Share this:
தமிழகத்தில் இன்று முதல் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 53 ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால் அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர் நாகை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 523 நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

இந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த முறையை விட ஒரு குவிண்டால் நெல்லுக்கு கூடுதலாக 53 ரூபாய் கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1958 ரூபாய் விலை கிடைக்கும்.
இதேபோல் பொது ரக நெல்லுக்கு ஒரு குவின்டால் 1865 ரூபாய் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூபாய் 53 கூடுதலாக விலை வைத்து ரூபாய் 1918 க்கு கொள்முதல் செய்யப்படும்.
First published: October 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading