முகப்பு /செய்தி /வணிகம் / மூன்று மாதங்களில் ₹12 லட்சம் கோடி நஷ்டம்- வேதனையில் இந்திய முதலீட்டார்கள்

மூன்று மாதங்களில் ₹12 லட்சம் கோடி நஷ்டம்- வேதனையில் இந்திய முதலீட்டார்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பொருளாதார ரீதியில் அனைத்துத் துறைகளும் சந்தித்து வரும் கடுமையான நெருக்கடியை விரைவில் சரி செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி கூறியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கடந்த மூன்று மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 12 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

மே மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி இந்த நஷ்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று மாதக் காலகட்டத்தில் HSIL, காஃபி டே, ஜெட் ஏர்வேஸ், ரிலையன்ஸ் கேப்பிடல், இந்தியாபுல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது 70 சதவிகித சந்தை மதிப்பை இழந்துள்ளனர்.

இந்த சூழலில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதமும் கடந்த ஆறு ஆண்டுகளில் காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. ஜிடிபி 5 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி 7.10 சதவிகித வீழ்ச்சியையும் சென்செக்ஸ் 5.81 சதவிகித வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன.

உள்நாட்டுப் பிரச்னைகள் மட்டுமல்லாது சர்வதேச பிரச்னைகள் இந்திய வர்த்தகத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர், ப்ரெக்ஸிட் குழப்பம் ஆகியனவும் இந்திய வர்த்தகத்துக்குத் தடைக்கல்லாக அமைந்துவிட்டன. அந்நீய முதலீடுகள் விலக்கப்படுவது, இந்திய வங்கிகள் மோசமான நிலை ஜிடிபி சரிவு அனைத்தும் முதலீட்டார்களையே பதம் பார்த்துள்ளது.

சந்தையில் மீண்டும் நம்பிக்கையை விதைப்பதுதான் முதல் கடமை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியில் அனைத்துத் துறைகளும் சந்தித்து வரும் கடுமையான நெருக்கடியை விரைவில் சரி செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: இந்தியாவில் பிட்காயின் முதலீடு சட்டப்பூர்வமானதா? க்ரிப்டோகரன்ஸி நடைமுறைகள் என்ன?

பொருளாதார மந்த நிலை - சாமானியர்கள் எதிர்கொள்வது எப்படி?

First published:

Tags: Sensex