Home /News /business /

காரை புக் செய்து விட்டு டெலிவரிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் - தாமதத்திற்கு என்ன காரணம்?

காரை புக் செய்து விட்டு டெலிவரிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் - தாமதத்திற்கு என்ன காரணம்?

கார்

கார்

நீங்கள் புக் செய்துள்ள புதிய கார் எப்போது உங்களுக்கு டெலிவரி ஆகும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கார் டெலிவரி செய்யப்படும் உறுதி செய்யப்பட்ட தேதியை பெற முடியவில்லையா...

நீங்கள் புக் செய்துள்ள புதிய கார் எப்போது உங்களுக்கு டெலிவரி ஆகும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கார் டெலிவரி செய்யப்படும் உறுதி செய்யப்பட்ட தேதியை பெற முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். ஏனென்றால் புதிய காருக்காக காத்திருக்கும் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள். ஆம் நாட்டில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் புக் செய்துள்ள புதிய கார் எப்போது கிடைக்கும் என டெலிவரிக்காக வரிசையில் காத்திருக்கிறார்கள்.

மேலும், இந்த வெயிட்டிங் பீரியட் (Waiting Period) இன்னும் நீண்டதாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. வெயிட்டிங் பீரியட் தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய கார்களை டெலிவரி செய்வதில் அசாதாரண தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் சமீபகாலமாக அனைத்து பிரபல மாடல்களுக்கும் காணப்படுகிறது. செமிகண்டக்டர்களின் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கார் நிறுவனங்களும், புதிய காரை புக் செய்துள்ளவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கார்களின் மிக சிறப்பான எலெக்ட்ரானிக் பார்ட்டான செமிகண்டக்டர் சிப்ஸ்களுக்கு (மைக்ரோசிப் ஷார்டேஜ்) நிலவி வரும் பற்றாக்குறையால், கார் நிறுவனங்களால் முழு திறனில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை, இதனால் நாட்டில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட கார் வாங்குவோர் புக் செய்த புதிய கார் தங்கள் வீட்டிற்கு எப்போது வரும் என காத்திருக்கின்றனர்.

ALSO READ |  இந்தியாவில் சிறந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்

புதிய மாடல்களை அறிமுகப்படுத்தினாலும், கார் நிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் கார்களை டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போல துரதிர்ஷ்டவசமாக டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்படுவதால், டெலிவரி நேரத்தில் பொருந்தக்கூடிய கட்டணங்கள் (applicable prices) செலுத்தப்பட வேண்டியிருப்பதால், வாங்குவோர் தங்கள் வாகனத்திற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கார் நிறுவனங்களுக்கு உள்ளீடு செலவுகள் (Inputs costs) அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சராசரியாக சுமார் 6% அதிகரித்துள்ளது. இந்நிலையில் இங்கே வெயிட்டிங் பீரியட்ஸ் இன்னும் பல மாதங்கள் மற்றும் சிலருக்கு ஒரு வருடம் கூட ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிப் நெருக்கடியால் சில கார்களின் வெயிட்டிங் பீரியட் 1 வருடமாக அதிகரித்துள்ள நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700, மாருதி, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், டாடா பஞ்ச், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் மற்றும் ஆடி எட்ரான் எலக்ட்ரிக் ஆகியவற்றின் சிஎன்ஜி வகைகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ALSO READ |  இமாலயன் ஏடிவிக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கியது பெனெல்லி டிஆர்கே 251.. விலை விவரம்!

அதே சமயம் மாதக்கணக்கில் காத்திருக்கும் கார்களின் பட்டியல் மிக நீளமானது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிட்டிங் பீரியட் காரணமாக, கார் நிறுவனங்களுக்கு புக்கிங் மிகப்பெரிய சுமையாக உள்ளது. உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி அதிக காத்திருப்பு பட்டியலில் (சுமார் 2.15 லட்சம் வெயிட்டர்ஸ்) முதலிடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகியவை தங்களது டாப் மாடல்களுக்கு தலா ஒரு லட்சம் பேக்லாக் வைத்துள்ளன. Maruti Suzuki India-வின்CEO கெனிச்சி அயுகாவா வெயிட்டிங் பீரியட் அதிகரித்து கொண்டே செல்வதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட அனைத்து உற்பத்தியாளர்களும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile, Car

அடுத்த செய்தி