Home /News /business /

5 ஆண்டுகளில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து நீக்கிய மத்திய அரசு.!

5 ஆண்டுகளில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து நீக்கிய மத்திய அரசு.!

Company

Company

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4,32,796 நிறுவனங்கள் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வ பதிவுகளில் (official records) இருந்து நீக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.32 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு காரணம் அவை செயல்படாத நிலையில் இருந்ததே. இவற்றில் 49,921 நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் அகற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், தனது எழுத்துப்பூர்வ பதிலில் நிறுவனங்கள் சட்டத்தின் 248-வது பிரிவின் கீழ் செயல்படாத நிறுவனங்களை அடையாளம் காண மற்றும் அவற்றை பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு சிறப்பு இயக்கங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளில், 2017-18-ஆம் நிதியாண்டில் தான் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் (சுமார் 2,26,116 நிறுவனங்கள்) நீக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்)-ன் செக்ஷன் 248-ன் படி நிதியாண்டுகளுக்கு முந்தைய 2 ஆண்டுகளுக்கு எந்தவொரு வணிகம் அல்லது செயல்பாடுகளையும் ஒரு நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தை அதிகாரப்பூர்வ பதிவேட்டில் இருந்து பெயரை அகற்றுவதற்கு உரிமையை வழங்குகிறது.

மத்திய அரசு அளித்துள்ள தகவலின்படி 2017-18-ஆம் நிதியாண்டில் மொத்தம் 2,26,166 நிறுவனங்கள், 2018-19-ஆம் நிதியாண்டில் 1,12,797 நிறுவனங்கள், 2019-20-ஆம் நிதியாண்டில் 43,912 நிறுவனங்கள், 2020-21-ஆம் நிதியாண்டில் பூஜ்யம் மற்றும் 2021-2021-ஆம் நிதியாண்டில் 49,921 நிறுவனங்கள் என மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் 4,32,796 நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகளில் நீக்கப்பட்டு உள்ளன. நீக்கப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களில் டெல்லியில் அதிகபட்சமாக 19,464 நிறுவனங்கள், மகாராஷ்டிரா 16,023 நிறுவனங்கள், உத்தரப் பிரதேசம் 12,823 நிறுவனங்கள், மேற்கு வங்கம் 11,044 நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு 6,989 நிறுவனங்கள் ஆகியவை அடக்கம்.



அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தனது எழுத்துப்பூர்வ பதிலில் மேலும் கூறி இருப்பதாவது, நிறுவனங்கள் சட்ட பிரிவு 164(2) (a) இன் கீழ், தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளாக வருடாந்திர அறிக்கை அல்லது நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்காத நிறுவனங்களிலிருந்து இயக்குநர்களை நீக்க கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய நபர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதே நிறுவனத்தின் இயக்குநராக அல்லது வேறு எந்த நிறுவனத்திலும் மீண்டும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Also Read : இனி இவர்களுக்கு பென்சன் கிடையாது.. விதிகளை மாற்றிய மத்திய அரசு.!

அதே போல ஷெல் நிறுவனங்களை (shell companies) அடையாளம் காணவும் அவற்றை நீக்கவும் அரசாங்கம் ஒரு சிறப்பு இயக்கத்தை மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். shell companies என்பவை செயலில் வணிக செயல்பாடு அல்லது குறிப்பிடத்தக்க சொத்துகள் இல்லாத நிறுவனங்களை குறிக்கின்றன. சில நேரங்களில் இவை வரி ஏய்ப்பு, பணமோசடி, உரிமையை மறைத்தல் மற்றும் பினாமி சொத்துக்கள் போன்ற சட்டவிரோத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

Also Read : 'கூகுள் பே' போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டம்.?

கோவிட் காரணமாக நிறுவனங்கள் மற்றும் வணிகத்தில் லாபம் இல்லை, எனவே அவர்கள் அதை மூட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், மேலும் சில நிறுவனங்கள் அரசால் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சூழலில் தான் 4 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Central government, India

அடுத்த செய்தி