Home /News /business /

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவால் வேதாந்தா பங்குகள் 3% ஏற்றம்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவால் வேதாந்தா பங்குகள் 3% ஏற்றம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.21 புள்ளிகள் உயர்ந்து 72.12 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
சர்வதேச சந்தையில் உள்ள கலவையான முடிவுகள், புதிய ஆர்பிஐ கவர்னர் மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்கு சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது.

காலை (17/12/2018) 10 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 212.06 புள்ளிகள் உயர்ந்து 36,179.07 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 51.00 புள்ளிகள் உயர்ந்து 10,856.45 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மும்பை பங்கு சந்தையைப் பொறுத்தவரையில் மின்சாரம், மெட்டல், ஆட்டோமொபைல், நிதி, ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகள் லாபம் அளித்து வருகின்றன.

அதே நேரம் டெலிகாம், ஐ.டி., டெக், ரியாலிட்டி உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

தேசிய பசுமை தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலையைத் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், அந்நிறுவன பங்குகளின் விலை 3 சதவீதம் உயர்ந்து 207.25 புள்ளியாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை | Sterlite plant
ஸ்டெர்லைட் ஆலை


டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.21 புள்ளிகள் சரிந்து 72.12 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 60.28 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் பேரல் 51.20 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: வைரக்கற்கள் பதிக்கப்பட்ட காலணி.. ரூ.117 கோடியா?
Published by:Tamilarasu J
First published:

Tags: Mumbai sharemarket, Sensex

அடுத்த செய்தி