முகப்பு /செய்தி /வணிகம் / ஒபெக் நாடுகள் எடுத்த முடிவு எதிரொலி : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?!

ஒபெக் நாடுகள் எடுத்த முடிவு எதிரொலி : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?!

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் ஒபெக் நாடுகள்

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் ஒபெக் நாடுகள்

ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை வரும் நவம்பர் மாதத்தில் இருந்து ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்கள் அளவு குறைக்கவுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (ஒபெக் நாடுகள்) அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பேரல்கள் அளவு குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. கொரோனா கால உற்பத்தி குறைவை விட தற்போது வெளியான அறிவிப்பு அதிக அளவை கொண்டுள்ளது. சர்வதேச வணிக சந்தையில் விலையை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கையை ஒபெக் நாடுகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஓபெக் நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவாகத்தான் உற்பத்தியைக் குறைத்துள்ளனர் என்று அமரிக்காகக் கண்டம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உற்பத்தி குறைவால் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியலில் என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுக்கிறது என்பதை பார்க்கலாம்.

கடந்த அக்டோபர் 5ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒபெக் நாடுகள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வரும் நவம்பர் மாதம் முதல் உற்பத்தி குறைவு நடைமுறைக்கு வரவுள்ளது.

உலக சந்தை பாதிப்பு:

உலக அளவில் ஒரு நாளுக்கு 100 மில்லியன் பேரல் அளவு கச்சா எண்ணெய் உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் 2 மில்லியன் பேரல் என்பது உலக தேவையில் 2 % ஆகும். இந்த அளவிலான உற்பத்தி குறைவு கண்டிப்பாக உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒபெக் நாடுகள் மற்றும் ஒபெக் கூட்டு நாடுகள் :

ஒபெக் என்பது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு ஆகும். மேலும் ஒபெக் கூட்டு நாடுகள் என்பது ஒபெக் அமைப்புடன் இணைப்பில் உள்ள நாடுகள் ஆகும்.

ஒபெக் அமைப்பு ஈராக் தலைநகர் பாக்தாத்வில் 1960ம் ஆண்டில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய 5 நாடுகள் இணைந்து உருவாக்கியது. தற்போது வரை அதில் 13 நாடுகள் உறுப்பினராக உள்ளனர்.

ஒபெக் கூட்டு நாடுகள் அமைப்பு என்பது அந்த 13 நாடுகளுடன் இணைந்து மேலும் அஜர்பைஜான், பஹ்ரைன், புருனே, கஜகஸ்தான், மலேசியா, மெக்சிகோ, ஓமன், ரஷ்யா, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகிய 10 நாடுகள் ஒபெக் உறுப்பினர் அல்லாத நாடுகள் என்று 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவர்களை ஒபெக்+ என்று குறிப்பிடுகிறார்கள். உறுப்பினர் அல்லாத 10 நாடுகளும் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்துதான் செயல்படுவர்.

ஒபெக் அமைப்பு உலக அளவில் கச்சா எண்ணெய் இருப்புக்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. 2021ம் ஆண்டு கணக்குப்படி ஒபெக் நாடுகள் 1,241.8 பில்லியின் பேரல்கள், அதாவது 80.4% கச்சா எண்ணெய்யைக் கையிருப்பு வைத்துள்ளனர். அதே போல் ஒபெக்+ நாடுகள் 3.25 பில்லியின் பேரல்கள், அதாவது 19.6% கச்சா எண்ணெய்யைக் கையிருப்பு வைத்துள்ளனர்.

சந்தையில் தேவைக்கு ஏற்ப உற்பத்தி குறைவு அல்லது அதிகரிப்பை ஒபெக் அமைப்பு முடிவு செய்யும். செப்டம்பர் மாதம் பேரல் 90 அமெரிக்க டாலர் அளவு குறைந்தது. அதே போல் ஜூன் மாதம் பேரல் 122 அமெரிக்க டாலர் அளவு விலை ஏறியது.

2020ம் ஆண்டு மே மாதங்களில் கச்சா எண்ணெய்யில் விலை வாங்குபவர்கள் இல்லாத காரணத்தினால் அதிக அளவில் சரிவைக் கண்டது. 9 மில்லியன் பேரல் அளவு உற்பத்தி குறைக்கப்பட்டது.

உலக அரசியல் பின்னணி:

தற்போது வெளியான இந்த தகவல் அமெரிக்காவை எதிர்த்து என்று பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனினை மறைமுகமாக எதிர்ப்பதாக இந்த நடவடிக்கை என்று உலக அரசியலில் பரவலாகப் பேசப்படுகிறது.

கடந்த காலத்தில் சவூதி அரேபியாவைப் புறக்கணிக்கப்பட்ட நாடாக கருதுவதாக அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதே போல் 2018ல் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணத்தில் தொடர்புடையதாகச் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடியாக அமெரிக்கப் பிரதமர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே உற்பத்தியை அதிகரிக்கக் கோரி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவூதி அரேபியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணத்தினால் அமெரிக்காவை எதிர்த்து ஒபெக் நாடுகள் ரஷ்யாவுடன் இணைந்து விட்டதாக அமெரிக்கா கண்டம் தெரிவித்துள்ளது.

Also Read : டென்ஷனை விடுங்க.. தவறான அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பினால் திரும்ப பெறுவது ஈஸி!

உற்பத்தி குறைவால் ரஷ்யாவிற்கு என்ன லாபம்?

ரஷ்யாவில் பொருளாதாரத்தின் முக்கிய வருமானமாக இருப்பது எரிபொருளிலிருந்து கிடைக்கும் வருவாய். இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணத்தினால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மேல் பொருளாதாரத் தடையைப்போட்டுள்ளனர். அதனால் ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்தது.

ரஷ்யா ஒபெக் நாடுகளுடன் இணைந்திருந்தால் உற்பத்தி குறைவு விலையை உயர்த்தும் அதனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நிலை வரலாம். இல்லையென்றால் அது போருக்கான செலவுக்கு பயன்படுத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் 45.2% கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இந்தியா மற்றும் சீனா வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபெக் நாடுகளின் இந்த முடிவு சர்வதேசச் சந்தையில் விலை உயர்வை அதிகரிப்பதுடன் இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் அழுத்த‌த்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Crude oil, OPEC, Petrol Diesel Price hike, Russia - Ukraine