ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆன்லைனில் பணத்தை மாற்றி அனுப்பி விட்டால் என்ன நடக்கும்? முழு விபரம்!

ஆன்லைனில் பணத்தை மாற்றி அனுப்பி விட்டால் என்ன நடக்கும்? முழு விபரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும்போது தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தான். அப்படி தவறு நேர்ந்தால் அதை எப்படி சரி செய்வது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை என்பது இந்த பரபரப்பு உலகில் சர்வ சாதாரணமாக மாறிவிட்ட ஒரு பழக்கம் தான். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு எந்த ஒரு மூலைக்கும் ஆன்லைன் மூலம் அவர்களின் அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப முடியும். அதற்கு அவர்களின் பேங்க் அக்கவுண்ட், வங்கியுன் IFSC கோட் தெரிந்து இருந்தால் போதும். நெட் பேக்கிங், மொபைல் பேக்கிங், ஆன்லைன் பேக்கிங் மூலம் நொடி பொழுதில் பணத்தை அனுப்பலாம் பெறலாம். இதில் எவ்வளவு அட்வாண்டேஜ்கள் உள்ளதோ அதே போல் சில பிரச்சனைகளும் உள்ளது.

IFSC என்பது வங்கியின் கிளையை அடையாளப்படுத்தும் எண் ஆகும். வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்ப வேண்டுமென்றால் இது கண்டிப்பாக தேவை. மொபைல் பேக்கிங், நெட் பேக்கிங்மூலம் பணத்தை அனுப்புவதற்கு முன்பு இந்த IFSC நம்பர் சரியாக உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து கொள்ளுங்கள். பணப்பரிமாற்றம் செய்யும்போது தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தான். அப்படி தவறு நேர்ந்தால் அதை எப்படி சரி செய்வது என்பதையும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். ஆன்லைன் பரிவர்த்தனைகளின்போது IFSC கோடினை தவறாக கொடுத்தால் பல நேரங்களில் பணம் எடுக்கப்படாது error கோட் காட்டும்.

அதுவே சில நேரங்களில் வேறு கிளையின் கோடாக இருந்தால், வேறு வாடிக்கையாளர்கள் இதே எண்ணைக் கொண்டிருந்தால் உங்களது பரிவர்த்தனை தொடரும். ஒருவேளை அப்படி ஒரு வங்கி, அக்கவுண்ட் நம்பரே இல்லை என்றால் உங்கள் அக்கவுண்டுக்கே பணம் திரும்ப வந்துவிடும். இது வங்கிகளை பொறுத்து எவ்வளவு நாள் என்பது மாறுபடும்.ஆனால் உங்கள் அக்கவுண்டுக்கு பணம் திரும்ப வந்துவிடும். இதுப்போல் நிகழ்ந்தால் உடனே கஸ்டமர் கேர் நம்பருக்கு ஃபோன் செய்து புகாரையும் பதிவு செய்து விடுவது நல்லது.

வயசான காலத்தில் பிள்ளைகள் கைவிட்டாலும் இந்த திட்டம் கைவிடாது!

ஒருவேளை அக்கவுண்ட் நம்பரை தவறாக குறிப்பிட்டு வேறு ஒருவரின் அக்கவுண்டுக்கு பணம் சென்றுவிட்டால் பதற்றம் அடையாமல் உடனே பணம் டெபிட் செய்யப்பட்ட மெசேஜயும் , ஸ்கீன் ஷார்ட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நேராக வங்கியிடம் சென்று காட்டி புகாரை பதிவு செய்தால் தகுந்த முறையில் பணம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை பணம் ரிசீவ் ஆனவர் திரும்ப தரவில்லை என்றாலும் அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வாய்ப்புள்ளது. அதே போல் நீங்கள் தவறுதலாக பதிவு செய்த அக்கவுண்ட் நம்பர் செயல்பாட்டில் இல்லாத அக்கவுண்டாக இருந்தால் அல்லது அப்படிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கு எண்ணோ, யு.பி.ஐ ஐடியோ இல்லையெனில் பணம் மீண்டும் திரும்பிவிடும். இதற்கு சில நாட்கள் ஆகலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Money