Home /News /business /

ஆன்லைனில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வது எப்படி?

ஆன்லைனில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வது எப்படி?

ஆன்லைனில் கேஸ் சிலிண்டர்

ஆன்லைனில் கேஸ் சிலிண்டர்

எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வது இப்போது உங்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம்.

    எல்.பி.ஜி அல்லது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (Liquefied Petroleum Gas) இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு ஆகும். மரம் அல்லது மண்ணெண்ணெய்க்கு சமமான பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எல்பிஜி இப்போது ஒரு விரிவான விநியோகஸ்தர் நெட்வொர்க் மூலம் நாட்டில் எளிதாகக் கிடைக்கிறது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிலிண்டர்களின் விலையை மானியமாக வழங்குகிறது. இதனால் குடும்பங்கள் தங்கள் எரிபொருள் தேவைகளுக்கு எல்பிஜியைப் பயன்படுத்துவதை மலிவுபடுத்துகின்றன.

    ஆரம்பகட்டத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வது என்பது நீண்ட மற்றும் சலிப்பான செயலாக இருந்தது. ஏனெனில் எல்பிஜி டீலரை நேரில் பார்ப்பது புக் செய்வது தான் ஒரே வழியாக இருந்தது. ஒருவேளை எல்பிஜி சிலிண்டர்கள் காணாமல் போய்விட்டால் அல்லது பல சந்தர்ப்பங்களில் பெறுநரைச் சென்றடையாமல் இருந்தால், அதன் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் ஒரு சிலிண்டர் அனுப்பப்படும் என்பதால் மக்கள் டீலரிடம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பிறகு பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் மற்றும் இண்டேன் கேஸ் ஆகிய மூன்று தேசிய எல்பிஜி சப்ளையர்களால், இந்த துயரங்கள் அனைத்தும் இப்போது கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறியது. அதன்படி, நாம் எளிதில் சிலிண்டர்களை எப்படி புக் செய்யலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.

    ஆன்லைனில் எல்பிஜி கேஸ் புக் செய்வது எப்படி?

    எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வது இப்போது உங்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம். Indane Gas, HP Gas மற்றும் Bharat Gas ஆகிய அனைத்தும் தங்களுடைய சொந்த ஆன்லைன் எல்பிஜி முன்பதிவு சேவைகளைக் வைத்துள்ளன. இது வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டர் ரீஃபில்லை முன்பதிவு செய்ய உதவுகிறது.

    * ஆன்லைன் கேஸ் புக்கிங்கின் நன்மை என்னவென்றால், நுகர்வோர் நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதைத் தேர்வு செய்யலாம்.

    ALSO READ |  ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இவை தான்!

    * வேளையில் இருக்கும் பலர் ரீஃபில் சிலிண்டர்களை டெலிவரி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் ஆன்லைன் வசதி மூலம் சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரீஃபில் ஆர்டர் செய்யும் போது முன்பணம் செலுத்தினால் போதுமானது.

    * சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டவுடன், நுகர்வோருக்கு SMS அல்லது மின்னஞ்சல் அறிவிப்பு வரும்.
    இந்த வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் சிலிண்டர் ரீஃபில் முன்பதிவு செய்வது மிகவும் வசதியான செயல்முறையாக மாறியுள்ளது.

    * ஆன்லைனில் சிலிண்டரை முன்பதிவு செய்ய, உங்கள் LPG வழங்குநரின் (HP, Bharat Gas அல்லது Indane) இணையதளத்திற்குச் சென்று உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

    * நீங்கள் அவ்வாறு செய்தவுடன், ஆன்லைனில் ரீஃபில்லை முன்பதிவு செய்வதற்கான விருப்பத்தைக் காண்பீர்கள். அதில் கொடுக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, ஆன்லைனில் பணம் செலுத்துவதன் மூலம் சிலிண்டர்களை புக் செய்யலாம். அல்லது டெலிவரி சமயத்தில் பணம் செலுத்திக்கொள்ளலாம்.

    ALSO READ |  3 மாதம் அவகாசம் நீட்டிப்பு.. பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை இதுதான்!

    ஆன்லைனில் கேஸ் புக்கிங் சிவத்தல் கிடைக்கும் நன்மைகள்:

    * ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணம் இல்லை

    * இது எல்பிஜி ரீஃபில்லைமுன்பதிவு செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் வசதியான முறை

    * ரீஃபில் எந்த நேரத்திலும், எங்கும் பதிவு செய்யலாம்

    * எளிதான கட்டண முறை

    * இதில் டெலிவரி கண்காணிப்பு சேவை உள்ளது.

    IVRS மூலம் கேஸ் சிலிண்டரை எப்படி முன்பதிவு செய்யலாம்?

    வாடிக்கையாளர்கள் எரிவாயு நிறுவனத்தின் IVRS (Interactive Voice Response System) மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.அதற்கு ஒரு நுகர்வோர் குறிப்பிட்ட பிராந்தியம்/மாநிலத்திற்கான நியமிக்கப்பட்ட எண்ணை அழைக்க வேண்டும். சிலிண்டரை முன்பதிவு செய்ய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    * பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட பிறகு வாடிக்கையாளர் தங்களது வாடிக்கையாளர் ஐடியை வழங்க வேண்டும்.

    ALSO READ |  இன்று முதல் ATM கார்டை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை! வந்திருக்கும் ரூல்ஸ் அப்படி

    * ஆர்டர் எண் மற்றும் மதிப்பிடப்பட்ட டெலிவரி தேதி ஆகியவை சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படும், டெலிவரி செய்யப்பட்டவுடன் பணம் செலுத்தினால் போதுமானது.

    எஸ்எம்எஸ் மூலம் கேஸ் சிலிண்டரை எப்படி புக் செய்யலாம்?

    வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி ரீஃபில் சிலிண்டர்களை எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்யவும் முடியும். வாடிக்கையாளர் முதலில் தனது மொபைல் எண்ணை கேஸ் வழங்குனரிடம் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு SMS அனுப்பும் போது ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக,
    எஸ்எம்எஸ் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த தகவலை குறிப்பிட்ட எரிவாயு நிறுவனத்தின் இணையதளத்தில் காணலாம்.

    ALSO READ | ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு

    மொபைல் ஆப் மூலம் கேஸ் புக்கிங்:

    ஸ்மார்ட் போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் Google Play store மற்றும் iTunes போன்ற தளங்களில் இருந்து செயலியை (உதாரணமாக, பாரத் கேஸ் மொபைல் செயலி) பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் தங்கள் ரீஃபில் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.

    * வாடிக்கையாளர் முதலில் தங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியை அளித்து மொபைல் செயலியில் பதிவு செய்ய வேண்டும் மற்றும் பதிவை அங்கீகரிக்க அவர்களின் தொலைபேசிக்கு அனுப்பப்படும் OTP ஐ உள்ளிட வேண்டும்.

    * ஆப் பதிவு முடிந்ததும், சிலிண்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் அதற்கான பணத்தை ஆன்லைனில் கிரெடிட்/டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

    * தற்போது எரிவாயு நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களுக்கான இ-வாலட் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த செயலியில் முன்பதிவு ஹிஸ்டரி, வாடிக்கையாளர் ஐடி மற்றும் பிற விவரங்கள் போன்ற தகவல்களும் உள்ளன.

    ALSO READ |  நாளை முதல் போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வரும் முக்கிய மாற்றம் இதுதான்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க!

    ஏஜென்சி மூலம் கேஸ் புக்கிங் செய்வது எப்படி?

    கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று வாடிக்கையாளர்கள் தங்கள் ரீஃபில் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர் எண்ணை வழங்குவதன் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் மற்றும் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது பணம் செலுத்தலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Gas Cylinder Price, Indane

    அடுத்த செய்தி