ஹோம் /நியூஸ் /வணிகம் /

அதிகரிக்கும் சிம் ஸ்வாப் பண மோசடி..! போன் எடுத்தாலே வங்கி கணக்கில் இருந்து மாயமாகும் பணம்

அதிகரிக்கும் சிம் ஸ்வாப் பண மோசடி..! போன் எடுத்தாலே வங்கி கணக்கில் இருந்து மாயமாகும் பணம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிம் ஸ்வாப் என்றால் என்ன என்பது பற்றியும் அதன் மூலம் எப்படி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது என்பதை பற்றியும் விரிவாக பார்ப்போம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்ட இன்றைய நிலையில் அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு நபரின் மொபைலுக்கு தெரியாத எண்ணில் இருந்து பலமுறை அழைப்பு வந்துள்ளது. ஆனால் மறுமுனையில் யாரும் பேசாமல் சில நொடிகளுக்கு பின்பு தானாக அழைப்பு நின்று போனது. சில நிமிடங்களுக்கு பின் அவரது செல்போனிற்கு 50 லட்சம் ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுபோன்று பல மோசடிகள் தற்போது நாட்டின் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

முக்கியமாக இதுபோன்ற பணப்பரிவர்த்தனைகள் நடைபெறும் போது உங்களுடைய சிம் கார்டின் அடிப்படையிலான ஓடிபி (otp) ஒன்று உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். ஆனால் மேலே சொன்ன அந்த நபருடைய சம்பவத்தில் ஒரு மிஸ்டு காலின் மூலமே அவருடைய பணம் திருடப்பட்டுள்ளது. இதற்குக் சிம் ஸ்வாப் என்ற மோசடி முறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அது என்ன சிம் ஸ்வாப் என்று சந்தேகமாக உள்ளதா? சிம் ஸ்வாப் என்றால் என்ன என்பது பற்றியும் அதன் மூலம் எப்படி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது என்பதை பற்றியும் விரிவாக பார்ப்போம்.

Read More : Gpay, Phonepay பயன்படுத்துறீங்களா..? வருது புதிய கட்டுப்பாடுகள்!

சிம் ஸ்வாப்:

சிம் ஸ்வாப் என்பது பெரும்பாலும் மொபைல் எண்ணின் உரிமையாளர்களின் கவனக்குறைவினால் நடக்கும் மோசடி ஆகும். முக்கியமாக இன்டர்நெட் மற்றும் இமெயில்களில் வரும் தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வதின் மூலமே இந்த மோசடியில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடும். இந்த சிம் ஸ்வாப்பிண் மூலம் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் உங்களது மொபைல் எண்ணை மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

முதலில் அவர்கள் உங்களது மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி-களுக்கு சில மோசடி லிங்குகளை பல்வேறு விதவிதமான வலைத்தளங்களில் இருந்து அனுப்புவது போல, பல்வேறு வழிகளில் அனுப்பி கொண்டிருப்பார்கள். மேலும் அந்த நபருக்கு கால் செய்து தங்களை வேறொருவர் போல பாவித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தகவல்களை திரட்ட முயற்சி செய்வார்கள்.

அவ்வாறு நீங்கள் தகவல்களை கொடுத்தாலோ அல்லது அவர்கள் அனுப்பிய லிங்குகளை கிளிக் செய்தாலோ உங்களுடைய மொத்த விவரங்களும் மோசடி கும்பலுக்கு சென்று விடும். இப்போது அவர்கள் உங்கள் டெலிகாம் ஆபரேட்டரை அணுகி போன் அல்லது சிம் தொலைந்து விட்டதாக கூறி உங்களது பழைய சிம் கார்டை பிளாக் செய்து விடுவார்கள். உங்களைப் பற்றிய தகவல்கள் மோசடி கும்பலிடம் இருப்பதால் டெலிகாம் ஆபரேட்டர் அனைத்து தகவல்களையும் சரிபார்த்து அவற்றை சரியான கண்டுகொண்டால் உங்களது சிம் பிளாக் செய்யப்படும்.

இப்போது மோசடி கும்பலிடம் உள்ள சிம்கார்டில் உங்களது மொபைல் எண் ஆக்டிவேட் செய்யப்பட்டு உங்களது வங்கி கணக்கு, ஓடிபி உட்பட அனைத்தும் அவர்களிடம் உள்ள சிம்கார்டுக்கு அனுப்பப்படும்.. மேலும் உங்கள் அக்கவுண்ட் நம்பரை உள்ளீடு செய்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் மிக எளிதாக திருடி விடுவார்கள்.

இது போன்ற மோசடிகளில் இருந்து எப்படி தப்பிப்பது?

இது போன்ற மோசடிகள் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
சந்தேகத்திற்குரிய இமெயில்கள், சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய லிங்குகள் ஆகியவற்றை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருந்தும், மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்தும் பதிவிறக்கம் செய்வதையும் நிறுத்த வேண்டும்.
இதைத்தவிர உங்களது வங்கி கணக்கு விவரங்கள், இமெயில் ஐடி, கடவுச்சொற்கள் ஆகியவற்றை யாரென்று தெரியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். எந்தவொரு வங்கி அதிகாரியோ அல்லது டெலிகாம் ஆபரேட்டரும் உங்களது வங்கி கணக்குகளையும் கடவுச்சொற்களையும் கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சந்தேகத்திற்குரிய எஸ்எம்எஸ், இமெயில் அல்லது ஃபோன் கால் உங்களுக்கு வந்தால் உடனடியாக அதனை உரிய அதிகாரிகளுக்கு அல்லது அந்த டெலிபோன் நிறுவனங்களுக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
First published:

Tags: Business, Online crime, Scam