அதிக இறக்குமதியால் வெங்காய விலை கிலோவுக்கு 22 ரூபாய்க்கு விற்பனையாகிறது- மத்திய அரசு

'இதுவரையில் 18 ஆயிரம் டன் வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. விலையைக் குறைப்பதற்காகக் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டன’.

அதிக இறக்குமதியால் வெங்காய விலை கிலோவுக்கு 22 ரூபாய்க்கு விற்பனையாகிறது- மத்திய அரசு
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: January 14, 2020, 6:57 PM IST
  • Share this:
வெங்காய விலை ஏற்றத்தை சீர் செய்ய அதிகப்படியாக வெங்காய இறக்குமதி செய்யப்பட்டு தற்போது கிலோ 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் வெங்காய விலை வரலாறு காணாத உச்சத்துக்கு சென்றது. அன்றாட உணவாகப் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால், அரசின் சார்பில் எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெங்காய விலை குறைந்துள்ளதாக மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ”இதுவரையில் 18 ஆயிரம் டன் வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. விலையைக் குறைப்பதற்காகக் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டன.


ஆனாலும், இதுவரையில் 2 ஆயிரம் டன் வெங்காயங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. தற்போது வெங்காய விலை கிலோவுக்கு 22 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படுகிறது. துருக்கி, எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சிவப்பு மற்றும் மஞ்சள் வெங்காயங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.

மேலும் பார்க்க: அமெரிக்க- ஈரான் பதற்ற நிலை தணிந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைவு!
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்