செப்டம்பர்-நவம்பரில் மீண்டும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரைசில் ரிசர்ச் தகவல்களின் படி பருவமழை சீராக இல்லாமல் தாறுமாறாக இருப்பதால் கரீப் பருவத்தில் வெங்காய அறுவடை தாமதமாகும் அதனால் வெங்காய விலை மீண்டும் அதிகமாகும் என்கிறது இந்த ஆய்வு.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் வெங்காயத்துக்கு அதிக கிராக்கி இருக்கும் போது இந்த விலை உயர்வு ஏற்படும் என்கிறது கிரைசில் ஆய்வு. ஜூன் 3ம் தேதியே பருவமழை சீசன் முன்னதாகத் தொடங்கி கரீப் சீசனில் நல்ல விளைச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிளகாய், வெங்காயத்தில் அதிக கவனம் செலுத்தினர். தக்காளி சீக்கிரமே கெட்டுப்போய்விடும் என்பதால் வெங்காயம், மிளகாயைப் பயிரிட்டனர்.
ஆனால் கிரைசில் என்ன கூறுகிறது எனில் ஜூலையில் பருவமழையில் தொய்வு ஏற்பட்டு இடைவெளி ஏற்பட்டது. மழை அளவு சராசரிக்கும் கீழ் 2% குறைந்தது. ஆகஸ்ட் மாதம்தான் மாற்றுப்பயிர்களுக்கான காலம் ஆகும். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் 9% மழை குறைவாக பெயதது. ஜூன் - ஜூலையில் வெங்காயம் பொதுவாக பயிரிடப்பட்டு அக்டோபர்-நவம்பரில் அறுவடை செய்யப்படும். இதனால் செப்டம்பர் முதல் நவம்பர் வரை வெங்காயத்துக்கு சீசன் குறைவுதான்.
இந்த முறை டாக்டே புயலினால் சேமித்து வைக்கப்பட்ட ராபி பயிர்களும் பாதிக்கப்பட்டது. வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மகாராஷ்டிராம், குஜராத் மாநிலங்களில் இதனால் ஈரப்பதம் அதிகமாகி வெங்காயத்தின் சேமிப்பு தாங்கும் சக்தி குறைவானது. இதனால் சப்ளை குறைவாகி விலை அதிகமாகும் என்கிறது கிரைசில் ஆய்வு.
தீவிர பருவநிலை மாற்றங்களினால் பயிர்ச்சேதம் அதிகமாகி 2019, 2020ம் ஆண்டில் வெங்காய விலை கிலோ ரூ.100 வரை உயர்ந்தது. வெங்காயத்துக்கு மழை அளவு மிக மிக முக்கியம் என்கிறது கிரைசில் ஆய்வு. இந்த ஆண்டு நாசிக்கில் 33% மழை குறைவானதால் வெங்காயம் அடிவாங்கியுள்ளது. வெங்காய உற்பத்தியில் 13% பங்களிப்பு செய்யும் புனேயிலும் ஆகஸ்ட் 30 நிலவரப்படி 65% மழை குறைவாகப் பதிவாகியுள்ளது.
இதனால் வெங்காயத்தின் வரத்து தாமதமாகும் போது பண்டிகை காலமான அக்டோபர்-நவம்பரில் வெங்காய விலை அதிகரிக்கும் என்கிறது கிரைசில் ஆய்வு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.