இந்தியன் ஆயில் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த ஓஎன்ஜிசி!

கடந்த இரண்டு நிதியாண்டுகளாக இந்தியன் ஆயில் நிறுவனம் ஓஎன்ஜிசி-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருந்து வந்தது.

news18
Updated: June 3, 2019, 6:28 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த ஓஎன்ஜிசி!
ONGC
news18
Updated: June 3, 2019, 6:28 PM IST
இந்தியாவில் அதிக லாபத்துடன் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் பட்டியலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

2018-2019 நிதியாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் லாபம் 34 சதவீதம் உயர்ந்து 26,716 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு சென்ற நிதியாண்டின் லாபம் குறித்த அறிக்கையை வெளியிட்ட இந்தியன் ஆயில் நிறுவனம் 17,274 கோடி ரூபாய் லாபம் பெற்று இருந்ததாக அறிவித்திருந்தது.

கடந்த இரண்டு நிதியாண்டுகளாக இந்தியன் ஆயில் நிறுவனம் ஓஎன்ஜிசி-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருந்து வந்தது.

இந்தியாவின் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடும் போதும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 6.17 லட்சம் கோடி ரூபாய் வருவாயுடன் முதல் இடத்தில் உள்ளது.

மேலும் பார்க்க:

Loading...

First published: June 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...