முகப்பு /செய்தி /வணிகம் / Oneplus 11 : இந்தியாவில் விரைவில்வெளியாக உள்ள ஒன்பிளஸ் 11 போனின் விலை என்ன தெரியுமா?

Oneplus 11 : இந்தியாவில் விரைவில்வெளியாக உள்ள ஒன்பிளஸ் 11 போனின் விலை என்ன தெரியுமா?

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

ஒன்பிளஸ் 11 ஆனது 5,000mAh பேட்டரி மூலம் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வந்துள்ளது. இதற்கான சார்ஜர் மொபைலின் பாக்சிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனானது பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போனின் வெளியீட்டு அன்று தான், சீன தொழில்நுட்ப நிறுவனமான ஒன்பிளஸ் புதிய ஆடியோ தயாரிப்பு ஒன்றை வெளியிட தயாராகி வருகிறது. இப்போது, அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, இந்தியாவில் ஒன்பிளஸ் 11 மாடலின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்நிலையில், ஒன்பிளஸ் 11 இந்தியாவில் மலிவான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1-இல் இயங்கும் தொலைபேசியாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 11 இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO 11 5G-க்கு போட்டியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. iQOO 11 அதிகாரப்பூர்வமாக ரூ.59,999 விலையில் தொடங்குகிறது. இப்போது, பிரைஸ்பாபா தளத்தில் இருந்து வரும் புதிய விலை கசிவை கருத்தில் கொண்டு, ஒன்பிளஸ் 11 ஆனது 12GB RAM மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய அடிப்படை மாடலுக்கு ரூ.54,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. 16 ஜிபி RAM மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வேறு வகைகளில் இந்த போன் வரவுள்ளது. இந்த மாடல்களின் விலை ரூ.59,999 மற்றும் ரூ.66,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி சொன்ன Oneplus..!

ஒன்பிளஸ் 10 Pro இன் வெளியீட்டு விலையை விட ஒன்பிளஸ் 11 இன் விலை மிகவும் மலிவானதாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் ஒன்பிளஸ் 10T இன் அடிப்படை விலையை விட சுமார் 5000 ரூபாய் இது அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 11 இன் விலை குறித்த எந்த விவரங்களையும் ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 11 ஏற்கனவே சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது மற்றும் அதே மாடல் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம், இந்திய மற்றும் சீன மாடலின் விவரக்குறிப்புகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது. கூடுதலாக, இந்த தொலைபேசியின் வடிவமைப்பு கூட அப்படியே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்நிறுவனம் ஏற்கனவே பலமுறை விவரித்துள்ளது. இது டிரிபிள் கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட பெரிய வட்ட கேமரா வசதியுடன் வரவுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இதன் விவரக் குறிப்புகளைப் பொறுத்த வரை, ஒன்பிளஸ் 11 (சீனா மாடல்) 6.7 இன்ச் QHD+ E4 OLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட், HDR 10+ மற்றும் LTPO 3.0-க்கான ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹார்டுவேரில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC மூலம் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. இதன் சீன மாடலை பொறுத்தவரை ஸ்டோரேஜை மேலும் விரிவாக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 11 ஆனது 5,000mAh பேட்டரி மூலம் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வந்துள்ளது. இதற்கான சார்ஜர் மொபைலின் பாக்சிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. IP54 மதிப்பீட்டிற்கான ஆதரவு, பாதுகாப்பிற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஆகியவை இந்த ஃபோனின் இதர அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

First published:

Tags: Mobile phone, Oneplus, Technology