Home /News /business /

இந்தியாவில் இதை வாங்குவதில் மூன்றில் ஒருவர் பெண்களாம்... புள்ளிவிவரத்துடன் வெளியானது அதிகாரப்பூர்வ அறிக்கை!

இந்தியாவில் இதை வாங்குவதில் மூன்றில் ஒருவர் பெண்களாம்... புள்ளிவிவரத்துடன் வெளியானது அதிகாரப்பூர்வ அறிக்கை!

ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீடு

பாரத ஸ்டேட் வங்கி தனது Ecowrap அறிக்கையில் இந்தியாவில் ஒவ்வொரு மூன்று ஆயுள் காப்பீட்டுகளிலும் ஒன்றை மகளிருக்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது.  

பாரத ஸ்டேட் வங்கி தனது Ecowrap அறிக்கையில் இந்தியாவில் ஒவ்வொரு மூன்று ஆயுள் காப்பீட்டுகளிலும் ஒன்றை மகளிருக்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது. ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீடு ஆகிய இரண்டிற்கும் காப்பீட்டுத் துறையில் மீள் வளர்ச்சி விரைவாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் பேங்க் வெளியிட்டுள்ள Ecowrap அறிக்கையில், “இந்தியாவில் ஒவ்வொரு 3 ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் ஒன்று மகளிருக்கு விற்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். FY21 இல் பெண்களுக்கு வழங்கப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை சுமார் 93 லட்சம் பாலிசிகள் ஆகும். இது 2019-20 இல் 32.23 சதவீத பங்காக இருந்த நிலையில் தற்போது 33 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பெண்களுக்கான பாலிசிகளின் விகிதம் 27 சதவீதமாகவும், எல்ஐசியின் பாலிசிகளின் விகிதம் 35 சதவீதமாகவும் உள்ளது. 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், விற்ற மொத்த பாலிசிகளில் பெண்கள் வாங்கிய பாலிசிகளின் எண்ணிக்கை, அகில இந்திய சராசரியான 33 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

தாராளமயமாக்கல் காரணமாக 2001 நிதியாண்டில் 2.71 சதவீதமாக இருந்த காப்பீட்டின் ஊடுருவல் 2009 நிதியாண்டில் 5.20 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஊடுருவல் படிப்படியாக வீழ்ச்சியைக் கண்டு, FY14 இல் 3.30 சதவீதத்தை எட்டியதையும் எஸ்பிஐ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

காப்பீட்டு ஊருடுவல்கள் சரிவை சந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில்,அரசின் ஆதரவு மற்றும் உலகளாவிய காப்பீட்டுத் திட்டங்களான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவை FY15 முதல் காப்பீட்டு ஊடுருவலை மீட்டெடுப்பதை உறுதி செய்தன என்றும், இதனால் FY21 இல் இது 4.20 சதவீதமாக அதிகரித்ததையும் குறிப்பிட்டுள்ளது.

எஸ்பிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல்-பிப்ரவரி மாதங்களில் FY22 இல், ஆயுள் காப்பீட்டாளர்களின் புதிய வணிக பிரீமியம் (NBP) 8.4 சதவீதம் (YTD) அதிகரித்து ரூ. 2.54 லட்சம் கோடியாக இருந்தது" குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் இன்றியமையாமை மற்றும் போதுமான பாதுகாப்பு, சிறந்த அம்சங்கள் மற்றும் தடையற்ற சேவைகள் ஆகியவற்றின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்த உணர்தல், புதிய பாலிசிகள் அல்லது போர்ட்டை சிறந்த கவரேஜ் மற்றும் க்ளைம் செட்டில்மென்ட் கொண்ட காப்பீட்டாளர்களிடம் வாங்குவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்ட காரணமாக அமைந்துள்ளது.

Also read... ரூ.16 லட்சம் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

எஸ்பிஐ ஈகோவ்ராப் அறிக்கையில், “ஏப்ரல்-ஜனவரி 22ல், காப்பீட்டாளர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்ஃபோலியோ 25.9 சதவீதம் அதிகரித்துள்ளது, சில்லறை சுகாதாரக் கொள்கைகள் 17.3 சதவீதம் மற்றும் குரூப் பாலிசிகள் 30.1 சதவீதம் அதிகரித்துள்ளன” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீடு அல்லாத வணிக தரகர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர் மற்றும் மொத்த பிரீமியத்தில் அவர்களின் பங்களிப்பு FY14 இல் 21.9 சதவீதத்திலிருந்து FY21 இல் 31.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா தொழிலாளர்களை கட்டாயமாக சேர்ப்பது, பாலிசிகள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைப்பது, ஜன் சுரக்ஷாவிற்கு ஏற்றார் போல் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை களைவது ஆகியவை காப்பீட்டு ஊடுருவலை மேலும் அதிகரிக்கலாம் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Insurance

அடுத்த செய்தி