சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள மாநில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள மாநில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு
பழைய மகாபலிபுரம் சாலை
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 11:36 PM IST
  • Share this:
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள  பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், கோவளம், பூஞ்சேரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை இணைக்கும் சாலைகளில் உள்ள 7 மாநில சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் சுங்க வரி கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை சென்று வரும் காருக்கான கட்டணம் மூன்று ரூபாய் அதிகரித்து, 30 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கு ஏழு ரூபாய் அதிகரித்து 78 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும்,  சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாய் சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோல், ஆட்டோவிற்கான சுங்க கட்டணமும் 10 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை புதிய சுங்க கட்டணம் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading