ஹோம் /நியூஸ் /வணிகம் /

Income Tax : பழைய வரி விதிப்பு முறை vs புதிய வரி விதிப்பு முறை..!

Income Tax : பழைய வரி விதிப்பு முறை vs புதிய வரி விதிப்பு முறை..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

புதிய வரி விதிப்பின் படி நீங்கள் பலன்களைப் பெற விரும்பினால், பழைய வரி விதி முறையில் உள்ள பல வரி விலக்குகளை நீங்கள் பயன்படுத்த முடியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய வருமானவரி வருமானவரிச் சட்டம் ஒவ்வொரு ஆண்டும் வரி விகிதங்களில் மாற்றத்தைக் கொண்டு வரும். ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த வேண்டாம். அதற்கு மேல் வருமானம் ஆண்டு வருமானம் இருந்தால் எவ்வளவு தொகையை வருமானமாக இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல வரியை கணக்கிட்டு செலுத்த வேண்டும். மேலும், ஆண்டு வருமானத்தில், அது சம்பளமாக இருந்தாலும் சரி, வியாபார வருமானமாக இருந்தாலும் சரி, சில விலக்குகள் உள்ளன.

தற்போது இரண்டு விதமான வரிவிதிப்பு முறை அமலில் இருக்கிறது. வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு பழைய வருமான வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதா என்று குழப்பமாக இருக்கலாம். இதில் எதைத் தேர்வு செய்வது என்பதை பற்றி எது பொருத்தமாக இருக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பழைய வரி விதிப்பு முறை vs புதிய வரி விதிப்பு முறை – விலக்குகளில் வேறுபாடுகள்

புதிய வரி விதிப்பின் படி நீங்கள் பலன்களைப் பெற விரும்பினால், பழைய வரி விதி முறையில் உள்ள பல வரி விலக்குகளை நீங்கள் பயன்படுத்த முடியாது.

புதிய வரி விகிதத்தில், மொத்த வருமானம் ரூ.15 லட்சம் வரை சலுகை அடிப்படையில் வரி கணக்கு செய்யப்படும்.

சம்பளம் வாங்குபவர்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ₹50,000 வரை அடிப்படை விலக்கை உங்களின் மொத்த வருமானத்திலிருந்து நீங்கள் கழித்துக் கொள்ளலாம். அதேபோல வீட்டு வாடகைக்கான அலவன்ஸ், பயணத்திற்கான உதவித்தொகை ஆகிய தொகைகளையும் நீங்கள் மொத்த வருமானத்தில் இருந்து விலக்காக பெறலாம். ஆனால் இந்த விருப்பங்கள் எதுவுமே நீங்கள் புதிய வரி விதிப்பு முறையை பயன்படுத்தினால் உங்களுக்கு கிடைக்காது.

மேலும், வருமான வரி சட்டம், 80 C பிரிவில் சேர்க்கப்படும் விலக்குகள் (வைப்பு நிதி கணக்குக்கு செலுத்தும் தொகை, LIP, பள்ளிக் கட்டணம், PPF, தேசிய சேமிப்பு சான்றிதழ், வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற பல்வேறு செலவினங்கள் மற்றும் சேமிப்புகளை உள்ளடக்கியது), 80 CCD(1) & 80 CCD(1B) பிரிவு VIA கீழ் உள்ள பல்வேறு விலக்குகள், 80D (உடல்நலக் காப்பீட்டு ப்ரீமியம் தொகை) 80D மருத்துவ செலவுகள், 80G பிரிவின் கீழ் வழங்கப்படும் நன்கொடை, 80TTA பிரிவின் கீழ் வரும் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து பெறப்பட்ட வட்டி உள்ளிட்ட எந்த விலக்குகளும் புதிய வரி விதிப்பு முறையில் கிடைக்காது.

அதாவது, புதிய வருமான வரி விதிப்பு முறையை பயன்படுத்தினால், எந்த விலக்கையும் கோர முடியாது.

பழைய வருமான வரி விதிப்பு முறை யாருக்கு பொருந்தும்:

மாதச்சம்பளம் வாங்கும் நபர்களுக்கு, பழைய முறை பொருந்தும், வரித்தொகை குறையும்.

உங்களுக்கு விலக்குகள் மற்றும் வருமான வரி சட்டப்பிரிவுகளின் படி ஒரு சில தொகைகளை வருமானத்தில் இருந்து குறைக்கும் தொகை அதிகமாக இருந்தால், புதிய வரி விதிப்பு பொருந்தாது.

புதிய வருமான வரி விலக்கு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?

புதிய வரி விதிப்பு இந்தியாவில் வசிக்கும் இந்திய குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மற்றும் HUF-க்கு மட்டுமே பொருந்தும்.

உங்களுடைய ஆண்டு வருமானம், 15 லட்ச ரூபாய்க்கும் மேல் இருந்தால், நீங்கள் புதிய வரி விதிப்பு முறையின் அடிப்படையில், 75 ஆயிரம் ரூபாயை வரியில் மிச்சம் பிடிக்க முடியும். அதாவது, அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வரி விகிதத்தில் சலுகைகள் உள்ளன. குறைவான வருமானம் இருந்தால், நீங்கள் பழைய வருமான வரி விகித அட்டவணையைப் பின்பற்றலாம்.

ஆனால், மாதச் சம்பளம் பெறும், வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு, புதிய வரி விதிப்பு வருமான வரியை குறைக்கும்.

First published:

Tags: Business, New Year 2023, Personal Finance