இந்த பழைய 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா? ஆயிரக்கணக்கில் சம்பாதிங்க!

பழைய 500 ரூபாய் நோட்டு

ரிசர்வ் வங்கி இது போல பிழையுடன் வெளியிட்டிருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் 5,000 மற்றும் 10,000 ரூபாய் வருமானம் பார்க்கலாம்.

  • Share this:
மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரே இரவில் அமலுக்கு கொண்டு வந்ததை நம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அன்றைய தினம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. மேலும் இந்த ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக புதிதாக அச்சிடப்பட்ட 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளிலும், ஏடிஎம் மெஷின் முன்பாகவும் நீண்ட நெடிய கூட்டம் வரிசைகட்டி நின்றன.

மேலும் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுக்களை சிலர் பழைய நினைவுகளுக்காக பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

வழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட இந்த பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இதில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களில் குறிப்பிட்ட அம்சங்கள் இருந்தால் அது உங்களுக்கு 10 மடங்கு லாபத்தை கொண்டு வரும்.

பொதுவாக ரிசர்வ் வங்கி அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் மிகுந்த கவனத்துடனே அச்சிட்டு வெளியிடுகின்றன. ஆனாலும் சில நேரங்களில் இதில் தவறு ஏற்பட்டுவிடுகிறது. அது போல பழைய 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியால் பிழையாக அச்சிடப்பட்ட நோட்டுக்களுக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிசர்வ் வங்கி இது போல பிழையுடன் வெளியிட்டிருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் 5,000 மற்றும் 10,000 ரூபாய் வருமானம் பார்க்கலாம்.

500 ரூபாய் நோட்டுக்களில் அச்சிடப்பட்ட சீரியல் நம்பர்கள் இரு முறை பிழையாக அச்சிடப்பட்டிருப்பின் அந்த நோட்டுக்கு பதிலாக 5,000 ரூபாயும், சில 500 ரூபாய் நோட்டுக்களின் ஓரத்தில் கூடுதலாக பேப்பர் அதன் ஓரங்களில் சேர்க்கப்பட்டிருப்பின் இந்த ரூபாய் நோட்டுகளுக்கு 10,000 ரூபாயும் ஆன்லையின் பெற முடியும்.

மேற்கூறிய பிழையுள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை oldindiancoins.com என்ற தளத்தில் விற்பனை செய்யலாம்.

Also Read:   இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி!

ரூபாய் நோட்டுக்களை ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி?

1. oldindiancoins.com தளத்திற்கு செல்லவும்.

2. ஹோம் பேஜில் ரிஜிஸ்டிரேஷன் டேபை க்ளிக் செய்து விற்பனை செய்பவரின் தகவல்களை உள்ளிடவும்.

3. உங்களிடம் இருக்கும் மேற்கண்ட பிழையுள்ள 500 ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை பதிவேற்றவும். இதன் மூலம் உங்களின் விளம்பரம் இந்த தளத்தில் சேமிக்கப்படும்.

4. இந்த விளம்பரத்தை பார்க்கும் வாங்குபவர் உங்களை தொடர்பு கொண்டு பேசி இந்த ரூபாய் நோட்டுக்களை காசு கொடுத்து வாங்கிக் கொள்வார்.

இதே போல குறிப்பிட்ட 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அதற்காக ஆயிரக்கணக்கான ரூபாயை ஈடாக கொடுத்து அந்த நோட்டுக்களை வாங்குவதற்கு சிலர் ஆன்லைனில் காத்திருக்கின்றனர்.
Published by:Arun
First published: