ஓல்ட் இஸ் கோல்ட் என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. பழையவை என்றுமே தங்கம் போன்ற மதிப்புடையவை என்பதே அதன் அர்த்தம். இந்த பழமொழியை மெய்ப்பிக்கும் விதமாக பழைய ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அதனை வைத்து 45,000 மடங்கு அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கேட்கவே குஷியாக இருக்கிறதா?
பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கான விஷயம். அருங்காட்சியங்களிலும் கூட பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை நம்மால் பார்க்க முடியும். ஒரு காலத்தில் புழக்கத்தில் பயன்படுத்திய ஒரு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, ஏன் 50 பைசா நாணயங்களை 90ஸ் கிட்ஸ் சிலர் பொக்கிஷமாக சேகரித்து வைத்திருப்பார்கள். அவற்றை இன்று நம்மால் காணமுடியாவிட்டாலும் கூட அவ்வகையான பழைய நாணயங்களை பார்க்கும் போது நமக்குள் ஒருவித சந்தோஷம் ஏற்படும். குழந்தை பருவத்திற்கே மனது சென்று திரும்பும்.
இருப்பினும் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது உங்களை கோடீஸ்வரனாக கூட ஆக்கலாம் என்பதே மறுக்க முடியாத உண்மை. சிலர் பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களுக்காக என்ன விலை கொடுக்கவேண்டும் என்றாலும் தயாராக இருப்பார்கள்.
அந்த வகையில் பழைய ஒரு ரூபாய் உங்களிடம் இருந்தால் அதனை 45,000 ரூபாய் விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள். அதற்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை. இணையதளத்தை பயன்படுத்தி வலைத்தளங்களின் மூலமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஒரு ரூபாய் நோட்டு 1957ம் ஆண்டு அச்சிடப்பட்டதாகவும், அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம்.பட்டேலின் கையெழுத்தும் இருக்க வேண்டியது அவசியம்.
மிகவும் அரிதான இந்த ரூபாய் நோட்டினை காயின்பஜார்.காம் என்ற இணையதளத்தின் மூலம் 44,999 ரூபாய்க்கு உங்களால் விற்பனை செய்ய முடியும். இது குறித்து விரிவான தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று நேரில் காண முடியும்.
இங்கு பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் விற்பனை மட்டுமல்லாமல் உங்களால் அரிதான கரன்சிக்களை வாங்கவும் முடியும். உதாரணமாக பழைய 50 ரூபாய் நோட்டை 8,200 ரூபாய்க்கும், 10 - 5 ரூபாய் நோட்டை 2999 ரூபாய்க்கும், 2 ரூபாய் நோட்டை 4999 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களது ரூபாய் நோட்டை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.